Home / Recipes / Pepper Chicken

Photo of Pepper Chicken by விருதை சமையல் at BetterButter
536
3
0.0(0)
0

Pepper Chicken

May-14-2018
விருதை சமையல்
0 minutes
Prep Time
40 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Healthy

Ingredients Serving: 4

  1. சிக்கன் - 1/2 கிலோ
  2. மிளகு -1 1/2  தேக்கரண்டி
  3. சீரகம் - 1 தேக்கரண்டி
  4. சோம்பு -1 தேக்கரண்டி
  5. பட்டை - 1
  6. கிராம்பு - 3
  7. காய்ந்த மிளகாய் - 3
  8. இஞ்சி - 1 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
  9. பூண்டு - 1 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
  10. பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
  11. மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
  12. பச்சை மிளகாய் - 2 (நீளமாக நறுக்கியது)
  13. நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
  14. உப்பு - தேவையான அளவு

Instructions

  1. மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  3. வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதனுடன் மஞ்சள் பொடி, பச்சை மிளகாய், அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
  4. பின்பு அதனுடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  5. சிக்கன் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
  6. சுவையான காரமான பெப்பர் சிக்கன் தயார்...

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE