Home / Recipes / Mutton biryani - Chicken Gravy- Egg drumstick gravy

Photo of Mutton biryani - Chicken Gravy- Egg drumstick gravy by pavumidha arif at BetterButter
649
8
0.0(0)
0

Mutton biryani - Chicken Gravy- Egg drumstick gravy

May-18-2018
pavumidha arif
0 minutes
Prep Time
105 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mutton biryani - Chicken Gravy- Egg drumstick gravy RECIPE

மட்டன் பிரியாணி,சிக்கன் கிரேவி-முட்டை முருங்கை புளி கிரேவி

Recipe Tags

  • Non-veg
  • Hard
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Frying
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. மட்டன் பிரியாணி:::
  2. மட்டன் 1 கப்
  3. நெய் 6 டீஸ்பூன்
  4. எண்ணெய் 3 டீஸ்பூன்
  5. அரிசி 1 மற்றும் 1/2 கப்
  6. வெங்காயம் 2 மற்றும் 1/2
  7. தக்காளி 2
  8. இஞ்சி பூண்டு விழுது 3 டீஸ்பூன்
  9. வெங்காயம் விழுது 5 டீஸ்பூன்
  10. மல்லி தழை சிறிது
  11. புதினா சிறிது
  12. உப்பு தேவையான அளவு
  13. தயிர் 1/2 கப்
  14. எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன்
  15. தேங்காய் பால் 1 மற்றும் ‌1/2 கப்
  16. தண்ணீர் 1 மற்றும் 1/2 கப்
  17. ஏலக்காய் 2
  18. கிராம்பு 2
  19. பட்டை சிறிது
  20. மல்லி பொடி 2 டீஸ்பூன்
  21. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  22. கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
  23. சிக்கன் கிரேவி:::
  24. சிக்கன் 1/2 கப்
  25. வெங்காயம் 1
  26. தக்காளி 1
  27. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  28. சிக்கன் பொடி 2 டீஸ்பூன்
  29. உப்பு தேவையான அளவு
  30. தேங்காய் பால் 6-10 டீஸ்பூன்
  31. எண்ணெய் தேவையான அளவு
  32. முட்டை முருங்கை புளி கிரேவி:::
  33. முட்டை 3
  34. வெங்காயம் 1
  35. தக்காளி 2
  36. முருங்கை காய் 2
  37. புளி பொடி 2 டீஸ்பூன்
  38. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  39. கத்திரிக்காய் 2
  40. உருளைக்கிழங்கு 1
  41. தேங்காய் பால் 1/2 கப்
  42. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  43. உப்பு தேவையான அளவு
  44. தேங்காய் எண்ணெய் 3 டீஸ்பூன்

Instructions

  1. மட்டன் பிரியாணி:::: முதலில் மட்டன் துண்டுகளை குக்கரில் 6 விசில் வரும் வரை வேக வைத்து கொள்ளவும்.
  2. பின்னர் வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், கிராம்பு மற்றும் பட்டை சேர்த்து கிளறவும்.
  3. பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.இப்போது இஞ்சி பூண்டு விழுது மற்றும் வெங்காயம் விழுது சேர்த்து வதக்கவும்.10 நிமிடம் கழித்து தக்காளி சேர்த்துக் கிளறவும்.
  4. உப்பு,புதினா, தயிர், மிளகாய் தூள், மல்லி பொடி சேர்த்து நன்கு கிளறவும்.இப்போது மட்டன் துண்டுகளை சேர்த்து கிளறவும்
  5. பிறகு தேவையான அளவு ‌தேங்காய் பால் மற்றும் தண்ணீர் , கரம் மசாலா சேர்த்து உப்பு சரி பார்த்து கொள்ளவும்.
  6. பிறகு மல்லி தழை சேர்த்து‌ அரிசியை போட்டு வேக வைக்கவும்.அரை வேக்காடு வெந்ததும் தம்மில் போட்டு சிறிது நேரம் வைக்கவும்.சுவையான மட்டன் பிரியாணி தயார்.
  7. சிக்கன் கிரேவி:::::: பாத்திரத்தில் சிக்கன், சிக்கன் பொடி, இஞ்சி பூண்டு விழுது, தயிர் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும்
  8. பின்னர் குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  9. பிறகு தக்காளி மற்றும் சிக்கன் கலவையை சேர்த்து நன்கு கிளறவும்
  10. இப்பொழுது தேங்காய் பால் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்
  11. மல்லி தழை தூவி 3-4 விசில் வரும் வரை காத்திருக்கவும்.பிறகு சிறிய தீயில் 5 நிமிடம் கிளறி இறக்கவும்
  12. ருசியான காரமான சிக்கன் கிரேவி தயார்.
  13. முட்டை முருங்கை புளி கிரேவி::::::: முட்டையை தனியே வேக வைத்து எடுக்கவும்
  14. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெந்தயம், சிறிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  15. பின்னர் தக்காளி, முருங்கை காய், உருளைக்கிழங்கு , கத்திரிக்காய் உப்பு சேர்த்து கிளறவும்.
  16. இப்பொழுது புளி பொடி மற்றும் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறவும்.
  17. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.15 நிமிடம் கழித்து தேங்காய் பால் சேர்த்து மூடி வைத்து சிறு தீயில் வேக விடவும்.
  18. 10 நிமிடம் கழித்து கிரேவி கெட்டி பதம் வந்ததும் முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து 10 நிமிடம் சிறு தீயில் வைக்கவும்.
  19. நன்கு கெட்டி பதம் வந்ததும் இறக்கவும்.சுவையான முட்டை முருங்கை புளி கிரேவி தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE