Home / Recipes / Chicken kabsa

Photo of Chicken kabsa by Raihanathus Sahdhiyya at BetterButter
32
3
0.0(0)
0

Chicken kabsa

May-20-2018
Raihanathus Sahdhiyya
10 minutes
Prep Time
45 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken kabsa RECIPE

இது அரேபியாவின் தேசிய உணவாகும். நம் நாட்டு பிரியாணியை போன்றது. ஆனால் காரம் குறைவான உணவு.

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Festive
  • Middle Eastern
  • Stir fry
  • Simmering
  • Roasting
  • Boiling
  • Frying
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 6

  1. கோழி - 1 கிலோ
  2. பாசுமதி அரிசி - 2 கப் (1/2 மணி நேரம் ஊற வைத்தது )
  3. வெண்ணெய் - 5 மேசைக்கரண்டி
  4. வெங்காயம் நறுக்கியது -2
  5. பூண்டுப் பற்கள் நறுக்கியது -3
  6. இஞ்சி (துருவியது) - 1/2 தேக்கரண்டி
  7. தக்காளி விழுது 1/2 கப் (100 gm)
  8. சிக்கென் ஸ்டாக் - 4 கப்
  9. பட்டை - 3/4
  10. ஏலக்காய் - 3-4
  11. நட்மெக் - 1/2 தேக்கரண்டி
  12. உலர்ந்த எலுமிச்சை - 1
  13. பப்ரிகா / மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி
  14. கரம் மசாலா - 1 மேசைக்கரண்டி
  15. உப்பு - தேவைக்கு
  16. குங்குமப்பூ - 4-6 ( சிறிது பாலில் ஊற வைத்தது)
  17. பாதாம் - 10-15 ( வெந்நீரில் ஊறவைத்து தோலுரித்து வைக்கவும்)
  18. உலர் திராட்சை - 2 மேசைக்கரண்டி (வெண்ணெயில் வறுத்தது)

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் சேர்த்து உருகியதும் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். லேசாக பொன்னிறமானால் போதுமானது.
  2. இப்பொழுது சிக்கென துண்டுகளை சேர்த்து அவ்வப்பொழுது லேசாக திருப்பி விடவும்
  3. 10 நிமிடம் கழித்து தக்காளி விழுது சேர்த்து ஒவ்வொன்றாக அனைத்து ஸ்பைசும் சேர்க்கவும்.
  4. பிறகு சிக்கென் ஸ்டாக் சேர்த்து 20 நிமிடம் வேக வைக்கவும்.(சிக்கென் ஸ்டாக் இல்லையென்றால் 4 கப் தண்ணீரும் 2 மாகி சிக்கன் சீசனிங் துண்டுகளும் சேர்க்கவும்)
  5. இப்பொழுது சிக்கென் துண்டுகளை வெளியே எடுத்து விட்டு அரிசியை சேர்த்து சமைக்கவும். அடிக்கடி கரண்டி கொண்டு கிளறக் கூடாது. வெந்தவுடன் லேசாக ஒருமுறை கிளறிவிட்டு உலர்ந்த எலுமிச்சையை அகற்றி விடவேண்டும்.
  6. எடுத்து வைத்துள்ள சிக்கென் துண்டுகளை தவாவில் லேசாக வெண்ணெய் சேர்த்து வறுக்கவும்
  7. இறுதியாக தட்டில் கப்ஸா சோறு வைத்து அதன் மீது வறுத்த கோழித் துண்டுகள் வைத்து பாதாம், பொரித்த உலர்திராட்சை தூவி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE