கொஸ்து | Gothsu in Tamil

எழுதியவர் Nisha Ramesh  |  9th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Gothsu recipe in Tamil,கொஸ்து, Nisha Ramesh
கொஸ்துNisha Ramesh
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

67

0

கொஸ்து recipe

கொஸ்து தேவையான பொருட்கள் ( Ingredients to make Gothsu in Tamil )

  • 1 நடுத்தர அளவுள்ள வெங்காயம், நன்றாக நறுக்கப்பட்டது.
  • 1 நடுத்தர அளவுள்ள கத்திரிக்காய், நன்றாக நறுக்கப்பட்டது
  • 2 தேக்கரண்டி புளிக்கரைசல், 2 கப் தண்ணீரோடு கலந்துகொள்ளப்பட்டது.
  • சுவைக்கேற்ற உப்பு
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி கடலை பருப்பு
  • 1 தேக்கரண்டி துவரம் பருப்பு
  • 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  • 1 தேக்கரண்டி கடலை மாவு

கொஸ்து செய்வது எப்படி | How to make Gothsu in Tamil

  1. ஒரு கடாயில் நடுத்தரத்திலிருந்து உயர் வெப்பம் நிலைவரை எண்ணெயைச் சூடுபடுத்தவும். எண்ணெய் பளபளப்பானதும், கடுகு சேர்த்து வெடிக்கவிடவும். அதன்பிறகு கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் சேர்த்து ஒரு விநாடி வறுக்கவும்.
  2. அதன்பிறகு இரண்டு பருப்புகளையும் சேர்த்து பொன்னிறமாகும்வரை வறுக்கவும். அதன்பின் நறுக்கப்பட்ட வெங்காயத்தை வெளுக்கும்வரை வதக்கவும். கத்திரிக்காய், மிளகாய்த் தூள் சேர்த்து ஒரு விநாடி வறுக்கவும்.
  3. அதன்பிறகு புளித்தண்ணீர், உப்பு சேர்க்கவும். 7-8 நிமிடங்கள் புளியின் பச்சை வாடை போகும் வரை சமைக்கவும்.
  4. கடலை மாவை ஒரு கப் தண்ணீரில் கரைத்து ஊற்றிக்கொள்க. மேலும் சில நிமிடங்கள் கொதிக்கவிடவும், குழம்பு அடர்த்தியாகத் துவங்கும்.
  5. இறுதியாக கொத்துமல்லி இலைகளால் அலங்கரித்து அடுப்பை நிறுத்தவும்.

எனது டிப்:

1. கத்திரிக்காய் அல்லது வெங்காயம் அல்லது இரண்டையும் நீங்கள் பயன்படுத்தலாம். 2. கொதிக்கும் குழம்பில் நேரடியாக கடலை மாவைச் சேர்க்கவேண்டாம். கட்டிவிடும். குளிர்ந்த நீரில் நன்றாகக் கலந்து அதன்பிறகு சேர்க்கவும். 3. கடலை மாவின் சுவை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அரிசி மாவை அடர்த்தியாகும் ஏஜெண்டாகப் பயன்படுத்தலாம். 4. மேலும் புளியின் புளிப்புக்கேற்றவாறு உப்பு அல்லது மிளகாய்த் தூளின் அளவு அமையும். மிகவும் புளிப்பாக இருப்பதை நீங்கள் உணர்ந்தால், மிளகாய்த் தூளின் அளவை அதிகரித்து புளிப்பின் வலிமையைக் குறைக்க அதிகத் தண்ணீர் சேர்க்கலாம்.

Reviews for Gothsu in tamil (0)