வெண்பிரியாணி | White Biriyani in Tamil

எழுதியவர் Maidhili Subaganesh  |  10th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of White Biriyani by Maidhili Subaganesh at BetterButter
வெண்பிரியாணிMaidhili Subaganesh
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    40

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

543

0

Video for key ingredients

    வெண்பிரியாணி recipe

    வெண்பிரியாணி தேவையான பொருட்கள் ( Ingredients to make White Biriyani in Tamil )

    • அரிசி 3 கப்
    • வெங்காயம் 4
    • தக்காளி 4
    • பச்சை மிளகாய் 5
    • தேங்காய் பால் 2 கப்
    • கொத்துமல்லி இலைகள் நன்றாக நறுக்கப்பட்டது 1 கப்
    • புதினா இலைகள் பொடியாக நறுக்கப்பட்டது 1/2 கப்
    • இலவங்கப்பட்டை 2 இன்ச் நீளமுள்ளது
    • கிராம்பு 5ல் இருந்து 6
    • ஏலக்காய் 3
    • பே இலை 1
    • நட்சத்திர சோம்பு 1
    • நெய் அல்லது வெண்ணெய் 4 தேக்கரண்டி
    • தண்ணீர் 3 கப்
    • சுவைக்கேற்ற உப்பு

    வெண்பிரியாணி செய்வது எப்படி | How to make White Biriyani in Tamil

    1. அரிசியைத் தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
    2. ஒரு பிரஷர் குக்கரில் வெண்ணெயை உருக்கி அனைத்து மசாலாப்பொருள்களையும் சேர்க்கவும்.
    3. நறுக்கப்பட்ட பச்சை மிளகாய், கொத்துமல்லி, புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்.
    4. நன்றாக நறுக்கப்பட்ட வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தேங்காய் பால் தண்ணிர் சேர்க்கவும்.
    5. உப்பு சேர்த்து கலவையை கொதி நிலைக்குக் கொண்டுவரவும்.
    6. அரிசி சேர்த்து குக்கரை மூடி 20 நிமிடம் சிறு தீயில் வேகவைக்கவும்.
    7. 20 நிமிடங்களுக்குப் பிறகு, குக்கரைத் திறந்து சூடாகப் பரிமாறவும்.

    எனது டிப்:

    அடர்த்தியான, புதிதாகத் தயாரிக்கப்பட்ட தேங்காய்ப் பால் கூடுதல் ருசியைக் கொடுக்கும். குடல் புண்ணுக்கும் நல்லது. பீன்ஸ், கேரட், பச்சைப் பட்டாணி, காலிபிளவர், பன்னீர் போன்ற காய்கறிகளையும் சேர்க்கலாம்.

    Reviews for White Biriyani in tamil (0)

    சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.