வீடு / சமையல் குறிப்பு / பலாப்பழம் தோசை

Photo of Jack fruit dosa by Kalai Rajesh at BetterButter
396
3
0.0(0)
0

பலாப்பழம் தோசை

Jun-02-2018
Kalai Rajesh
150 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பலாப்பழம் தோசை செய்முறை பற்றி

இது ஏன் மகளின் விருப்பமான தோசை..பலாப்பழம் நிறைய கிடைக்கும் போதெல்லாம் இதனை செய்வேன்.. இந்த கோடைகாலத்தில் கிடைக்கும் இந்த பழத்தை வைத்து இதனை ட்ரை செய்து பாருங்க

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பலாப்பழம் - 20 (கொட்டை எடுத்து வைக்கவும்)
  2. அரிசி - 1/2 கப் (கழுவி ஊறவைக்கவும்)
  3. வெல்லம்- 1/4கப் பொடி செய்தது
  4. தூவிய தேங்காய் - 1/4கப் (குவித்து அளக்கவும்)
  5. உப்பு - 1/2 தேகரண்டி
  6. ஏலக்காய் பொடி - 1/8 தேகரண்டி
  7. எண்ணெய் (அ) நெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்
  2. ஊறிய பின், சிறிது தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் பழத்தை தவிர எல்ல பொருட்களையும் சேர்த்து அரைக்கவும்.தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
  3. ஆரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும்.
  4. பின் பழத்தை தனியாக அரைத்து மாவுடன் சேர்த்து கலக்கவும்.
  5. (மாவு கலவை)
  6. தோசை கல்லை சூடு செய்து , எண்ணெய் தேய்த்து ,தோசை வார்க்கவும். நெய் சேர்த்து சுடவும்.. ஒரு புறம் வெந்தவுடன் மறு புறம் திருப்பி போட்டு எடுக்கவும்.
  7. சுவையான தோசையை தேனுடன் கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவர்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்