செட்டிநாடு வெங்காயம் பூண்டு குழும்பு | Chettinad Vengaya Poondu Kuzhambu in Tamil

எழுதியவர் Karthika Gopalakrishnan  |  11th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Chettinad Vengaya Poondu Kuzhambu by Karthika Gopalakrishnan at BetterButter
செட்டிநாடு வெங்காயம் பூண்டு குழும்புKarthika Gopalakrishnan
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

521

0

Video for key ingredients

  செட்டிநாடு வெங்காயம் பூண்டு குழும்பு recipe

  செட்டிநாடு வெங்காயம் பூண்டு குழும்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Chettinad Vengaya Poondu Kuzhambu in Tamil )

  • எண்ணெய் - 1தேக்கரண்டி
  • வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
  • மிளகு - 1 தேக்கரண்டி
  • சீரகம் - 1 தேக்கரண்டி
  • கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் - 5ல் இருந்து 7
  • மல்லி - 2 தேக்கரண்டி
  • வறுப்பதற்கு & அரைப்பதற்கு:
  • சர்க்கரை 1/2 தேக்கரண்டி
  • தேவையான உப்பு
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • தக்காளி 1 பெரிய அளவு பொடியாக நறுக்கப்பட்டது
  • பூண்டு - 20 பற்கள் தோலுரிக்கப்பட்டது
  • சாம்பார் வெங்காயம் - 10 தோலுரிக்கப்பட்டது
  • கறிவேப்பிலை கையளவு
  • பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  • கடுகு - 1 தேக்கரண்டி
  • எண்ணெய் - 3 தேக்கரண்டி

  செட்டிநாடு வெங்காயம் பூண்டு குழும்பு செய்வது எப்படி | How to make Chettinad Vengaya Poondu Kuzhambu in Tamil

  1. 15 நிமிடங்களுக்குத் தண்ணீரில் புளியை ஊறவைக்கவும். பிழிந்து புளிக்கரைசலை எடுத்துக்கொள்ளவும்.
  2. 2. ஒரு சிறிய வானலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்தி நடுத்திர தீயில் அனைத்து பொருள்களையும் கடலைப்பருப்பு பொன்னிறமாகும்வரையும் நல்ல வாசனை வெளியேறும்வரையிலும் வறுக்கவும். ஆறவிட்டு ஒரு மிக்சியில் சாந்தாக அரைத்துக்கொள்க.
  3. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்துக. கடுகு சேர்க்கவும். விதைகள் வெடிக்க ஆரம்பித்ததும், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வதக்கவும்.
  4. தோலுரித்த சின்ன வெங்காயத்தையும் பூண்டையும் சேர்க்கவும். அது 6 – 7 நிமிடங்களுக்கு வெங்காயம் வெளுக்கும்வரை வேகவைத்து, நறுக்கப்பட்ட தக்காளியைச் சேர்த்து கூழாகும்வரை வேகவைக்கவும்.
  5. அரைத்த மசாலாவையும் தேவையான உப்பையும் சேர்க்கவும். பச்சை வாடை வெளியேறும்வரை வேகவைக்கவும்.
  6. புளிக்கரைசலைச் சேர்த்து தேவையானத் தண்ணீரையும் சேர்க்கவும்.
  7. ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
  8. சூடான சாதத்தோடு பரிமாறி மணமான ருசியான குழம்பை அனுபவிக்கவும். ’ இந்தக் குழம்பை பப்படத்தோடு முயற்சிக்க மறக்காதீர். எண்ணெய் பிரியும்வரை நடுத்தர தீயில் வேகவைக்கவும்.

  எனது டிப்:

  மசாலாவுக்காக வறுக்கும்போது எப்போதும் சிவப்பு மிளகாயை கடைசியில் சேர்க்கவும். முன்னரே சேர்ப்பது மிளகாயைக் கருகச்செய்து தீய்ந்த வாடையையும் கசப்புச் சுவையையும் குழம்புக்குத் தரும். செட்டிநாடு சமையல் வழக்கமாக நடுத்தர தீயில் சமைக்கப்படும். கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும் என்றாலும் குழம்பில் எண்ணெய் கசிந்துவருவதை நீங்கள் ஆச்சரியத்துடன் பார்ப்பீர்கள். அதுதான் செட்டிநாடு சமையலின் மிகப்பெரிய இரகசியம். வழக்கமாக நல்லெண்ணெயை இந்த குழம்புக்காகப் பயன்படுத்துவேன். அரிசியுடனும் இந்தக் குழம்புடனும் சாப்பிடும்போது நீங்கள் ஒரு கரண்டி நல்லெண்ணெயை சேர்க்கலாம்.

  Reviews for Chettinad Vengaya Poondu Kuzhambu in tamil (0)

  சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.