கத்திரிக்காய் காரக் குழம்பு | Kathirikai Kara Kuzhambu in Tamil

எழுதியவர் Karthika Gopalakrishnan  |  11th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Kathirikai Kara Kuzhambu by Karthika Gopalakrishnan at BetterButter
கத்திரிக்காய் காரக் குழம்புKarthika Gopalakrishnan
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

416

0

கத்திரிக்காய் காரக் குழம்பு recipe

கத்திரிக்காய் காரக் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Kathirikai Kara Kuzhambu in Tamil )

 • சிவப்பு மிளகாய் - 2
 • கறிவேப்பிலை கையளவு
 • உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
 • கடுகு - 1/2 தேக்கரண்டி
 • எண்ணெய் - 1 தேக்கரண்டி
 • தாளிப்புக்கு:
 • காய்ந்த மிளகாய் – 5
 • கடலைப் பருப்பு - 3/4 தேக்கரண்டி
 • உளுத்தம்பருப்பு - 3/4 தேக்கரண்டி
 • மிளகு - 1/4 தேக்கரண்டி
 • மல்லி - 1 தேக்கரண்டி
 • சீரகம் - 1/4 தேக்கரண்டி
 • தக்காளி - 1 நடுத்தர அளவு நறுக்கப்பட்டது
 • வறுப்பதற்கும் அரைப்பதற்கும்
 • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
 • உப்பு - சுவைக்கேற்ற அளவு
 • மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
 • எலுமிச்சை அளவு புளி - 1
 • சின்ன வெங்காயம் - 10
 • சின்ன கத்திரிக்காய் - 8

கத்திரிக்காய் காரக் குழம்பு செய்வது எப்படி | How to make Kathirikai Kara Kuzhambu in Tamil

 1. வெந்நீரில் புளியை ஊறவைத்து அடர்த்தியானக் கரைசலை எடுத்துக்கொள்ளவும்.
 2. அனைத்துப் பொருள்களையும் “ வறுப்பதற்கும் அரைப்பதற்கும் கீழ் ” கொடுக்கப்பட்டதை வெறுமனே வறுக்கவும். தக்காளி கூழாகும்வரை. அவற்றை நீங்கள் ’ கருகவிடாமல் பார்த்துக்கொள்ளவும். மிளகாயை கடைசியில் சேர்க்கவும், கருகவிடாமல் செய்வதற்கு.
 3. ஆறவிட்டு வறுத்த சேர்வைப்பொருள்களை சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 4. கத்திரிக்காயைக் கழுவி தண்டை நறுக்கிக்கொள்க. நான் தண்டோடப் பயன்படுத்த விரும்புவேன், குழம்புக்கும் அது ஒரு தனி சுவையைக் கொடுப்பதால்.
 5. கத்திரிக்காயை அடியில் சற்றே துண்டுபோட்டுக்கொள்ளவும் (கத்திரிக்காயின் அடிப்பாகத்தில் + குறி போட்டுக்கொள்ளவும்) பிறகு மசாலாக்களை அதனுள் சேர்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 6. ஒரு வானலியில் எண்ணெயை நடுத்தர தீயில் சூடுபடுத்தி “Tதானிப்புக்குக் கீழ் ”. கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் சேர்க்கவும்.
 7. கடுகு பொறிய ஆரம்பித்ததும், வெங்காயம், மஞ்சள் சேர்த்து சிம்மில் வெங்காயம் சற்றே பொன்னிறமாகும்வரை விடவும்.
 8. தீணி சேர்க்கப்பட்ட கத்திரிக்காயைச் சேர்த்து ’ சுருங்கும்வரை வதக்கவும்.
 9. இப்போது, மீதமுள்ள சாந்தைச் சேர்த்து ’ சில நிமிடங்கள் வதக்கவும்.
 10. இறுதியாக, புளித் தண்ணீர், உப்பு சேர்த்து சிம்மில் குழம்பை கத்திரிக்காய் வேகும்வரையும் எண்ணெய் வெளியேறும்வரையும் வைக்கவும்.
 11. வழக்கமாக, காரக் குழம்பு அதிக நல்லெண்ணெயாலும் நடுத்தர தீயில் நீண்டநேரம் சமைப்பதாலும் ருசி அதிகமாக இருக்கும். சூடான சாதம் பப்படத்தோடு காரக் குழம்பைப் பரிமாறவும்.

Reviews for Kathirikai Kara Kuzhambu in tamil (0)