வீடு / சமையல் குறிப்பு / கார அம்மிணி கொழுக்கட்டை

Photo of Spicy Ammini Kozhukattai by Karthika Gopalakrishnan at BetterButter
6204
30
5.0(0)
2

கார அம்மிணி கொழுக்கட்டை

May-11-2016
Karthika Gopalakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி மாவு - 1 கப்
  2. உப்பு - 1/2 தேக்கரண்டி
  3. தண்ணீர் - 1 3/4 கப்
  4. வறுப்பதற்கும் அரைப்பதற்கும்-
  5. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  6. கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
  7. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  8. காய்ந்த மிளகாய் – 3
  9. மல்லி – 1 தேக்கரண்டி
  10. மிளகு - 1/2 தேக்கரண்டி
  11. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  12. தேங்காய்த் துருவல் - 1/2 கப் துருவப்பட்டது
  13. தாளிப்புக்கு -
  14. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  15. கடுகு - 1 தேக்கரண்டி
  16. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  17. கறிவேப்பிலை கையளவு

வழிமுறைகள்

  1. அரிசி மாவை சலித்து உப்பு சேர்க்கவும்.
  2. ஒரு கடாயில் தண்ணீரை கொதிக்கவைக்கவும். கொதி நிலைக்கும் வந்ததும் அடுப்பை நிறுத்தவும் (தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும்)
  3. 3.	 அரிசி மாவுடன் வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும், மாவாக மாறும்வரை கரண்டியால் கலக்கவும். எனது கைகளைப் பயன்படுத்த விரும்புவேன், உங்கள் கைகள் சூட்டைப் பொறுத்துக்கொள்ள முடிவதை உறுதி செய்யவும்.
  4. அரிசி மாவை அப்படியே 10 நிமிடங்களுக்கு விட்டுவைக்கவும்.
  5. மாவிலிருந்து சிறுசிறு உருண்டைகளாகச் செய்து ஸ்டீமரில்/ இட்லி குக்கரில் 8 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்
  6. இதற்கிடையில், வேகவைத்த உருண்டைகளுக்கு காரசாரமான பொடியை நம்மால் தயாரிக்க இயலும்.
  7. எண்ணெயை ஒரு வானலியில் நடுத்த சூட்டில் சூடுபடுத்தவும்.
  8. 8. 	 கடலைப்பருப்பு, உளுந்து, மல்லி, சீரகம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து சில நிமிடங்கள் நல்ல நறுமணம் வரும்வரை வறுக்கவும். சிவப்பு மிளகாய் சேர்த்து அதைத் தொடர்ந்து தேங்காய் சேர்த்து 3-4 நிமிடங்கள் வறுக்கவும்.
  9. கலவையை ஆறவிட்டு ஒரு மிக்சியில் கரடுமுரடானப் பவுடராக அரைத்துக்கொள்ளவும்.
  10. ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி சேர்வைப்பொருள்களை தாளிக்கவும்
  11. வேகவைத்த உருண்டைகளையும் மசாலா பவுடரையும் சேர்க்கவுமை். மசாலா பவுடரால் உருண்டைகள் சமமாக நன்றாகப் பூசப்படும்வரை நன்றாகக் கலக்கவும்.
  12. 3-4 நிமிடங்கள் வறுக்கவும். தீயை அணைத்துவிட்டு உடனடியாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்