கார அம்மிணி கொழுக்கட்டை | Spicy Ammini Kozhukattai in Tamil

எழுதியவர் Karthika Gopalakrishnan  |  11th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Spicy Ammini Kozhukattai by Karthika Gopalakrishnan at BetterButter
கார அம்மிணி கொழுக்கட்டைKarthika Gopalakrishnan
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  25

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

165

0

Video for key ingredients

 • How to make Idli/Dosa Batter

கார அம்மிணி கொழுக்கட்டை recipe

கார அம்மிணி கொழுக்கட்டை தேவையான பொருட்கள் ( Ingredients to make Spicy Ammini Kozhukattai in Tamil )

 • அரிசி மாவு - 1 கப்
 • உப்பு - 1/2 தேக்கரண்டி
 • தண்ணீர் - 1 3/4 கப்
 • வறுப்பதற்கும் அரைப்பதற்கும்-
 • எண்ணெய் - 1 தேக்கரண்டி
 • கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
 • உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
 • காய்ந்த மிளகாய் – 3
 • மல்லி – 1 தேக்கரண்டி
 • மிளகு - 1/2 தேக்கரண்டி
 • சீரகம் - 1/2 தேக்கரண்டி
 • தேங்காய்த் துருவல் - 1/2 கப் துருவப்பட்டது
 • தாளிப்புக்கு -
 • எண்ணெய் - 1 தேக்கரண்டி
 • கடுகு - 1 தேக்கரண்டி
 • உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
 • கறிவேப்பிலை கையளவு

கார அம்மிணி கொழுக்கட்டை செய்வது எப்படி | How to make Spicy Ammini Kozhukattai in Tamil

 1. அரிசி மாவை சலித்து உப்பு சேர்க்கவும்.
 2. ஒரு கடாயில் தண்ணீரை கொதிக்கவைக்கவும். கொதி நிலைக்கும் வந்ததும் அடுப்பை நிறுத்தவும் (தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும்)
 3. 3. அரிசி மாவுடன் வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும், மாவாக மாறும்வரை கரண்டியால் கலக்கவும். எனது கைகளைப் பயன்படுத்த விரும்புவேன், உங்கள் கைகள் சூட்டைப் பொறுத்துக்கொள்ள முடிவதை உறுதி செய்யவும்.
 4. அரிசி மாவை அப்படியே 10 நிமிடங்களுக்கு விட்டுவைக்கவும்.
 5. மாவிலிருந்து சிறுசிறு உருண்டைகளாகச் செய்து ஸ்டீமரில்/ இட்லி குக்கரில் 8 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்
 6. இதற்கிடையில், வேகவைத்த உருண்டைகளுக்கு காரசாரமான பொடியை நம்மால் தயாரிக்க இயலும்.
 7. எண்ணெயை ஒரு வானலியில் நடுத்த சூட்டில் சூடுபடுத்தவும்.
 8. 8. கடலைப்பருப்பு, உளுந்து, மல்லி, சீரகம், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து சில நிமிடங்கள் நல்ல நறுமணம் வரும்வரை வறுக்கவும். சிவப்பு மிளகாய் சேர்த்து அதைத் தொடர்ந்து தேங்காய் சேர்த்து 3-4 நிமிடங்கள் வறுக்கவும்.
 9. கலவையை ஆறவிட்டு ஒரு மிக்சியில் கரடுமுரடானப் பவுடராக அரைத்துக்கொள்ளவும்.
 10. ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி சேர்வைப்பொருள்களை தாளிக்கவும்
 11. வேகவைத்த உருண்டைகளையும் மசாலா பவுடரையும் சேர்க்கவுமை். மசாலா பவுடரால் உருண்டைகள் சமமாக நன்றாகப் பூசப்படும்வரை நன்றாகக் கலக்கவும்.
 12. 3-4 நிமிடங்கள் வறுக்கவும். தீயை அணைத்துவிட்டு உடனடியாக பரிமாறவும்.

எனது டிப்:

1. வெந்நீர் பயன்படுத்தவும். தண்ணீர்போல் ஆகாமல் இருக்க தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கவும். மாவில் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்ப்பது உருண்டையை கடினமாக்கிவிடும். 2. உருண்டைகளை நீண்ட நேரம் ’ வேகவைக்க வேண்டாம், அவை உடைக்கக்கூடும்.

Reviews for Spicy Ammini Kozhukattai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.