அரிசி தேங்காய் பாயாசம் | Arisi Thengai Payasam in Tamil

எழுதியவர் Anusha Praveen  |  11th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Arisi Thengai Payasam by Anusha Praveen at BetterButter
அரிசி தேங்காய் பாயாசம்Anusha Praveen
 • ஆயத்த நேரம்

  70

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  25

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

294

0

அரிசி தேங்காய் பாயாசம் recipe

அரிசி தேங்காய் பாயாசம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Arisi Thengai Payasam in Tamil )

 • தேங்காய் துருவல் ¾ c
 • பச்சரிசி 2 தேக்கரண்டி
 • வெல்லம் 250 கிராம் அல்லது 1 கப் துருவல்
 • கொழுப்புள்ள பால் 1 கப்
 • தண்ணீர் ½c
 • ஏலக்காய் பொடி 1.5 தேக்கரண்டி
 • முந்திரி பருப்பு 10 உடைத்தது
 • உலர் திராட்சை 10ல் இருந்து 15 உடைத்தது
 • நெய் (தெளிவாக்கப்பட்ட வெண்ணெய்) ⅓ கப்

அரிசி தேங்காய் பாயாசம் செய்வது எப்படி | How to make Arisi Thengai Payasam in Tamil

 1. பச்சரிசை வெந்நீரில் ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
 2. அரிசி வெந்ததும், தேங்காயோடு சேர்த்து 2 தேக்கரண்டி பாலும் சேர்த்து பிளெண்டரில் சாந்தாக அரைத்து எடுத்து வைக்கவும்.
 3. ஒரு கடாயில், தண்ணீர் வெல்லம் சேர்த்து வெல்லம் முழுமையாகக் கரையும்வரை சூடுபடுத்தவும்.
 4. வெல்லம் துரிதமாக சூடாவதால் நடுத்தர தீயில் இதைச் செய்வதை உறுதி செய்யவும். அப்படிச் செய்ததும், அழுக்கு ஏதாவது இருந்தால் நீக்குவதற்கு வடிக்கட்டவும். எடுத்து வைக்கவும்.
 5. ஒரு கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நெய் விட்டு சூடுபடுத்தவும்.
 6. அரைத்த சாந்தைச் சேர்த்து நன்றாகக் கலக்கி தீயைக் குறைக்கவும்.
 7. தேங்காய் சாந்து அனைத்து நெய்யையும் உறிஞ்சும்வரை தொடர்ந்து கலக்கவும்.
 8. நெய் அதிகமாக இருப்பதைப் பார்த்தால், தயாரித்து வைத்துள்ள வெல்லப்பாகை ஏலக்காயோடு சேர்த்து சேர்த்து விஸ்கினால் நன்கு கலக்கிக்கொள்ளவும்.
 9. தீ நடுத்தர அளவில் இருப்பதை உறுதிசெய்து நன்றாக அடித்துக்கொள்ள உறுதி செய்யவும் அல்லது கலவை கட்டியாகிவிடும்.
 10. சாந்து கூழ் போல் அடர்த்தியானதும், பாலைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
 11. கிட்டத்தட்ட 1.5 தேக்கரண்டி நெய்யை பாயாசத்துடன் இந்த நிலையில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
 12. சிம்மில் 5ல் இருந்து 6 நிமிடங்களுக்கு நடுத்தர தீயில் தொடரவும். அப்படிச் செய்ததும், சுத்தமானப் பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்.
 13. சிறிய வானலியைச் சூடுபடுத்தவும்,மீதமுள்ள நெய்யைப் பயன்படுத்தி.
 14. உடைத்த முந்திரிபருப்பைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். வடிக்கட்டி பாயாசத்தில் சேர்க்கவும்.
 15. அதே பாத்திரத்தில், மீதமுள்ள உலர் திராட்சையைச் சேர்த்து அது உப்பும் வரை வறுக்கவும்.
 16. அப்படிச் செய்ததும், இதை நெய்யுடன் பாசத்தில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
 17. உங்கள் அரிசி தேங்காய் பாயாசம் தயார்.

எனது டிப்:

Make sure the flame is kept at low while cooking the ground paste.

Reviews for Arisi Thengai Payasam in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.