வீடு / சமையல் குறிப்பு / உளுத்தம் வடை

Photo of Udin Vada by Jyothi Varne at BetterButter
1440
7
5.0(0)
0

உளுத்தம் வடை

May-11-2016
Jyothi Varne
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • லாக்டோஸ் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உளுத்தம்பருப்பு -1 பெரிய கப்
  2. அரிசி - 1 1/2 தேக்கரண்டி (குவியல்)
  3. 1/2 வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
  4. மிளகு (கரடுமுரடாக அரைக்கப்பட்டது) - 1தேக்கரண்டி
  5. கொத்துமல்லி - 3 கொத்து, நன்றாக நறுக்கப்பட்டது
  6. கறிவேப்பிலை - 2 கொத்துகள், நன்றாக நறுக்கப்பட்டது
  7. பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கப்பட்டது
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. ஒரு சிட்டிகை சமையல் சோடா
  10. பொறிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உளுத்தம்பருப்பையும் அரிசியையும் குறைந்தபட்சம் 2-3 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. பருப்பு அரிசியை கிரைண்டருக்கு மாற்றி அரைத்துக்கொள்ளவும். பதத்தைச் சரிசெய்ய கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம்.
  3. பதம் மென்மையான சாந்தாக இருக்கவேண்டும், குருணையாக இருக்கக்கூடாது. கிரைண்டரில் அதற்கு இரண்டொரு முறை அரைக்க வேண்டியதிருக்கும்.
  4. ஒரு பாத்திரத்தில், நறுக்கப்பட்ட வெங்காயம், கொத்துமல்லி இலைகள், சீரகம் (விருப்பம் சார்ந்தது), பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  5. அரைத்த பருப்பு அரிசி சாந்தை எடுத்து, உப்பு, சமையல் சோடா, மிளகாய் சேர்க்கவும்.
  6. அனைத்துச் சேர்வைப்பொருள்களையும் நன்றாகக் கலக்கவும், வடைக்கான உங்கள் மாவு தயார்.
  7. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தவும். வடை முழுமையாக மூழ்கும்படிக்கு எண்ணெய் போதுமான அளவு இருக்கவேண்டும். கஞ்சத்தனம் இங்கே கூடாது இல்லையேல் அடியில் ஒட்ட ஆரம்பித்துவிடும்.
  8. இதோ வருகிறது தந்திரப் பகுதி - உங்கள கைகளைப் போதுமானத் தண்ணீரோடு ஈரப்படுத்திக்கொள்ளவும்.
  9. ஒரு உருண்டை மாவை உங்கள் ஈரமான உள்ளங்கையில் எடுத்துக்கொள்ளவும்.
  10. மாவின் மையத்தில் உங்கள் ஆள்காட்டி விரலைக்கொண்டு ஒரு ஓட்டைப்போடவும் வடையைப்போல.
  11. மெல்ல உங்கள் உள்ளங்கையிலிருந்து கடாயில் சூடான எண்ணெயில் விடவும். கீழே காண்பிக்கப்பட்டப் படத்தைப்போல பொங்கினால் - உங்கள் எண்ணெய் சரியான வெப்பத்தில் இருக்கிறது என்று பொருள்.
  12. வடையை நடுத்தர தீயில் பொறிக்கவும் - தானே அவை மெல்ல எழ ஆரம்பிக்கும்.
  13. ஓரிரு நிமிடங்களில், மெல்ல பொன்னிறமாக மாறத் துவங்கும் - அடுத்த பக்கம் வேகுவதற்கு வடையைத் திருப்பிப்போடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்