வீடு / சமையல் குறிப்பு / ஈரானியன் ஆரஞ்சு சிக்கன் புலாவ்

Photo of Orange chicken Pulav (Iranian eid special pulav) by khadheeja irfana at BetterButter
314
1
0.0(0)
0

ஈரானியன் ஆரஞ்சு சிக்கன் புலாவ்

Jun-04-2018
khadheeja irfana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஈரானியன் ஆரஞ்சு சிக்கன் புலாவ் செய்முறை பற்றி

உங்கள் இல்லத்தையும் உள்ளத்தையும் மணக்க சுவைக்க வைக்கும் புதுமையான புலாவ்.A must try recipe...try this :yum::yum:

செய்முறை டாக்ஸ்

  • ஈரானிய
  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • பேக்கிங்
  • பாய்ளிங்
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பாஸ்மதி அரிசி - 3 கப்
  2. போன்லெஸ் சிக்கன் - 500 கிராம்
  3. பெரிய ஆரஞ்ச் - 2
  4. குங்குமப்பூ - 1/2 தே.க
  5. சீனி - 1/3 கப்
  6. கருவா - 4 துண்டு
  7. ஏலக்காய் பொடி - 2 தே.க
  8. அன்னாசி மொக்கு - 2
  9. கேரட் - 2 
  10. ஆரஞ் தோல் - 1 பழத்தின் தோல் (மெல்லியதாக எடுத்தது)
  11. உப்பு - தேவைக்கு
  12. பாதம் - 1/2 கப்
  13. திராட்சை - 1/2 கப்
  14. பிஸ்தா - 1/2 கப்
  15. நெய் - 2 மே.க
  16. சிக்கன் பிரட்டி வைக்க:
  17. தந்தூரி மசாலா - 2 மே.க
  18. தனி மிளகாய் தூள் - 1 மே.க
  19. தயிர் - 1 கப்
  20. ஆரஞ் சாறு - 2 மே.க
  21. எலுமிச்சை சாறு - 1 தே.க
  22. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மே.க
  23. உப்பு - தேவைக்கு
  24. எண்ணெய் - 1 மே.க

வழிமுறைகள்

  1. சிக்கனோடு பிரட்டி வைக்க சொன்னவற்றை சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.ஓவனை ப்ரீ ஹீட் செய்து வைக்கவும்.பேக்கிங் ட்ரேயில் பாயில் பேப்பர் போட்டு சிக்கனை பரத்தி வைக்கவும்.அரை மணி நேரம் பேக் பண்ணவும்.
  2. பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. பாதம்,பிஸ்தா,திராட்சையை நெய்யில் பொறித்து எடுத்து வைக்கவும்.
  4. குங்குமபூவோடு 1/2 தே.க சீனி சேர்த்து இடித்து பொடியாக்கவும்.அதை 3 மே.க ஆரஞ் ஜூஸ்வுடன் கலந்து வைக்கவும்.
  5. கேரட் மற்றும் ஆரஞ் தோலை நீட்டமாக அரிந்து வைத்து கொள்ளவும்.ஆரஞ் தோலை கொதிக்கும் தண்ணீரில் 1 நிமிடம் போட்டு தனியாக எடுத்து வைக்கவும்.ஆரஞ் தோலின் கசப்பு தன்மை போய் விடும்.
  6. ஒரு பாத்திரத்தில் 2 மே.க குங்குமபூ ஆரஞ் ஜூஸ் கலவை,1 மே.க எண்ணெய்,1 மே.க சீனி சேர்த்து குறைவான தீயில் வைக்கவும்.அதில் கேரட்,ஆரஞ் தோலை போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதோடு மீதமுள்ள குங்குமபூ ஆரஞ் ஜூஸ் கலவை,சீனி,கருவா,ஏலக்காய் பொடி,அன்னாசி மொக்கு போட்டு 1 நிமிடம் வதக்கவும்.1 கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் 10 நிமிடம் வைக்கவும்
  7. ஒரு பெரிய சட்டியில் 10 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் உப்பு அன்னாசி மொக்கு,கருவா,ஏலக்காய் போட்டு ஊற வைத்த அரிசியை போடவும்.அதோடு 1 மே.க ஆரஞ் ஜூஸ் ஊற்றவும்.முக்கால் பதம் வெந்ததும் வடித்து குளிர்ந்த நீரில் காட்டி வடித்து வைக்கவும்.
  8. ஒரு பெரிய பாத்திரத்தில் நெய் ஊற்றி ஒரு லேயர் ரைஸ் அதன் மேல் கேரட் ஆரஞ் கலவை பேக் செய்த சிக்கன் துண்டுகள் நட்ஸ் போட்டு மீண்டும் ஒரு லேயர் ரைஸ் போட்டு மீண்டும் அதே முறையில் அடுக்கவும்.மேலே நெய் ஊற்றி தம்மில் 20 நிமிடம் போடவும்.
  9. நன்கு பதமாக கிளறி விடவும்.புதுமையான சுவையுடன் ரம்மியமான மணத்துடன் கூடிய ஆரஞ்சு சிக்கன் புலாவ் ரெடி.கேரட் ஆரஞ் தோல் கலவை,நட்ஸ் தூவி அலங்கரிக்கவும்.ஆலிவ்  சாலட்வுடன் பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்