வீடு / சமையல் குறிப்பு / மிளகு வடை (ஹனுமன் பிரசாதம்)

Photo of Milagu Vadai (Prasad for Hanuman) by Lakshmi Vasanth at BetterButter
442
15
0.0(0)
0

மிளகு வடை (ஹனுமன் பிரசாதம்)

May-11-2016
Lakshmi Vasanth
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
0 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 0

  1. வெள்ளை உளுந்து - 1 கிளாஸ்
  2. மிளகு - 2 தேக்கரண்டி
  3. அரிசி மாவு - 5 தேக்கரண்டி
  4. வெண்ணெய் - 2 தேக்கரண்டி
  5. சீரகம் - 2 தேக்கரண்டி
  6. கறிவேப்பிலை -8/10 குச்சி
  7. உப்பு
  8. பொறிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. மிளகுத்தூள், சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். உளுந்தை தண்ணீரில் 2 மணிநேரம் ஊறவைக்கவும். தண்ணீரை நீக்கிவிட்டு பருப்பை ஒரு பருத்தித் துணியில் பரவச்செய்யவும். ஒன்றல்லது இரண்டு மணிநேரம் உலர்த்தவும்.
  2. இப்போது பருப்பை இரண்டு பகுதியாகப் பிரித்து, ஒரு பகுதி பருப்பை அரைத்து அவற்றோடு 1 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் சேர்க்கவேண்டாம். கரடுமுரடாக அரைத்துக்கொள்ளவும். அதே வழியில் மீதமுள்ள பருப்பையும் அரைத்துக்கொள்ளவும்.
  3. இந்தக் கலவையில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடிப்படையில் மாவு அடர்த்தியாக இருக்கும். இவற்றோடு ஒட்டாமல் இருக்க நாம் அரிசி மாவைச் சேர்க்கிறோம் , கலக்கும்போது மாவு பந்தாக எழுவதைக் காண்பீர்கள்.
  4. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும். கைகளில் எண்ணெய் தடவிக்கொள்ளவும், ஏனெனில் மாவு அதிகம் ஒட்டும் தன்மையில் இருக்கும். சிறுசிறு உருண்டைகளாக மாவை உருட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். இப்போது எண்ணெய் தடவி ஒரு உருண்டையை செய்து தட்டையாக வடையை ஒரு பிளாஸ்டிக் தாளில் தட்டி மத்தியில் ஒரு ஓட்டை போடவும்.
  5. இந்த வடைகளை எண்ணெயில் பொறிக்கவும். எண்ணெயை மிதமானச் சூட்டில் வைக்கவும். 6-8 வடைகளை ஒன்றாக நீங்கள் போடலாம். திருப்பிப்போட்டு சற்றே பொன்னிறமானபின் எடுக்கவும். 2-3 வாரங்கள் காற்றுப்புகா பாத்திரத்தில் வைத்துக்கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்