வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரைப் பொங்கல்

Photo of Sakkarai Pongal by Meena Kumar at BetterButter
1316
31
5.0(0)
0

சர்க்கரைப் பொங்கல்

May-11-2016
Meena Kumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • நவ்ரதாஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. அரிசி - 1/2 கப்
  2. பாசிப்பருப்பு (தோலில்லாமல் உடைத்துக்கொள்ளவும்) - 2 தேக்கரண்டி
  3. வெல்லம் - 1/2 கப் அல்லது அதிகமாக, அடர்நிற வகை
  4. ஏலக்காய்த் தூள் - 3 காய்கள் புதிதாகப் பொடி செய்யப்பட்டது
  5. நெய் - 2-3 தேக்கரண்டி
  6. பால் கொழுப்பு அல்லது கட்டியான கிரீம் - 2 தேக்கரண்டி (கட்டியானக் கிரீம் கூடுதல் ருசியைக் கொடுக்கும்)
  7. முந்திரி பருப்பு - 6-8 உடைத்தது
  8. பாதாம் - துண்டுகளாக உடைக்கப்பட்டது
  9. உலர் திராட்சை - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசியை 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஒரு கடாயில் வெல்லத்தை உருக்கவும், 1 கப் தண்ணீர் விட்டு. அழுக்குகளை வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
  2. கனமானப் பாத்திரத்தைச் சூடுபடுத்தி பாசிப்பருப்பை நல்ல வாசனை வெளிவரும்வரை வெறுமனே வறுத்து அதன்பிறகுக் கழுவி அரிசியுடன் ஊறவைக்கவும்.
  3. அரிசியையும் பருப்பையும் போதுமானத் தண்ணீர்விட்டு அரிசி குக்கரில் அல்லது பிரஷர் குக்கரில் சொதசொதப்பானப் பதத்திற்கு வேகவைக்கவும். வெந்ததும் மசித்த அரிசி மற்றும் பருப்பை சற்றே பால் அல்லது கிரீம் சேர்க்கவும்.
  4. வெல்லப் பாகைக் கொதி நிலைக்கும் சற்றே அடர்த்தியாகவும் கொண்டுவந்து பிறகு மசித்த அரிசியைச் சேர்த்து சிறு தீயில் 5 நிமிடங்களுக்கு 1 தேக்கரண்டி நெய், நீர்மம் உடனே உலர்ந்தால் கொஞ்சம் அதிகமாகப் பாலைச் சேர்க்கவும். தீயை நிறுத்தவும்.
  5. மீதமுள்ள நெய்யை ஒரு கடாயில் சூடுபடுத்தி பருப்புகளை பொன்னிறமாகும்வரை வறுக்கவும். அதன்பிறகு உலர் திராட்சையைச் சேர்த்து அவை உப்பும்போது, தீயை நிறுத்திவிட்டு ஒட்டுமொத்தத்தையும் சர்க்கரைப் பொங்கலில் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
  6. பூஜைக்குப் பிறகு பொங்கல் பிரசாதமாக அல்லது குளிர்காலத்து உணவாக ஐஸ் கிரீம் கப்களில் கரண்டியுடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்