கடலை மாவு லட்டு | Besan Ladoo / Kadala maavu laddu in Tamil

எழுதியவர் Meena Kumar  |  11th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Besan Ladoo / Kadala maavu laddu by Meena Kumar at BetterButter
கடலை மாவு லட்டுMeena Kumar
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

258

0

கடலை மாவு லட்டு recipe

கடலை மாவு லட்டு தேவையான பொருட்கள் ( Ingredients to make Besan Ladoo / Kadala maavu laddu in Tamil )

  • கடலை மாவு - 1 கப்
  • பொடி செய்யப்பட்ட சர்க்கரை - 1`/2 கப் அல்லது 1 தேக்கரண்டி அதிகமாக
  • நெய்/தெளிவான வெண்ணெய் - கிட்டத்தட்ட 1/3 கப்
  • ஏலக்காய் பொடி - 4 காய்கள் (விதைகள் பொடியாக்கப்பட்டது)
  • கோல்டன் உலர் திராட்சை - அலங்கரிப்பதற்காகக் கொஞ்சம் (நெய்யில் வறுத்துக்கொள்ளவும், பச்சையாக இங்கே நீங்கள் பயன்படுத்தினால்)

கடலை மாவு லட்டு செய்வது எப்படி | How to make Besan Ladoo / Kadala maavu laddu in Tamil

  1. ஒரு கணமானப்பாத்திரத்தில் கடலை மாவை மிகச் சிறிய தீயில் வெறுமனே வறுத்துக்கொள்ளவும் (எண்ணெய் தேவையில்லை, கலக்கும் பதத்தில் மாவை சூடுபடுத்தவும் அவ்வளவுதான்). இது 20-25 நிமிடங்கள் ஆகலாம்.
  2. மாவு தயாரானதும், 2 அடர் நிறங்களில் மாறும், மாவிலிருந்து வறுத்த பருப்பு வாசனை வெளிவரும். (ஒரு சிறிய சிட்டிகை அளவை சோதித்துப்பார்க்கவும், பச்சை ருசி இருக்கக்கூடாது)
  3. தீயிலிருந்து மாவை எடுத்து ஆறவிட்டு, பொடி செய்யப்பட்ட சர்க்கரை மற்றும் ஏலக்காய்த் தூளைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து நெய்யைச் சூடுபடுத்தி கிட்டத்தட்டக் கொதி நிலைக்குக் கொண்டுவந்து உடனடியாகச் சூடான நெய்யை சில கரண்டிகள் ஒரே நேரத்தில் மாவு சர்க்கரைக் கலவையில் சேர்க்கவும்
  4. கட்டி சேராமல் கலக்கவும். (சிறிய உருண்டைகள் செய்வதுதான் நோக்கம் என்பதால் வடிவத்தைப் பெறுவதற்குப் போதுமான நெய்யைச் சேர்க்கவும்)
  5. தாங்கும் பதத்தில் சூடு இருக்கும்போது, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டு கொஞ்சம் உலர் திராட்சையை அலங்காரமாக மேலே வைக்கவும். முற்றிலுமாக ஆறியதும், கடலை மாவு லட்டுக்கள் பரிமாறுவதற்குத் தயார்.
  6. காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமிக்கவும், 2-3 நாட்களுக்கு அறையின் வெப்பத்தில் நன்றாக இருக்கும்.

Reviews for Besan Ladoo / Kadala maavu laddu in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.