கம்பங்கூழ் | Kamban Koozhu | Bajra Porridge in Tamil

எழுதியவர் Manjula Bharath  |  11th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Kamban Koozhu | Bajra Porridge by Manjula Bharath at BetterButter
கம்பங்கூழ்Manjula Bharath
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  2

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

143

0

கம்பங்கூழ் recipe

கம்பங்கூழ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Kamban Koozhu | Bajra Porridge in Tamil )

 • மாங்காய் - 1/4 (நறுக்கப்பட்டது)
 • வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கப்பட்டது)
 • பச்சை மிளகாய் - 2-3 (விருப்பம் சார்ந்தது)
 • மோர் தேவைப்படும் அளவு
 • தண்ணீர் - 2கப் (தோராயமாக)
 • சாதம் - 1/2 கப் (விருப்பம் சார்ந்தது)
 • கம்பு மாவு - 1/2 கப்

கம்பங்கூழ் செய்வது எப்படி | How to make Kamban Koozhu | Bajra Porridge in Tamil

 1. கம்பு மாவை இரண்டு கப் தண்ணீர் விட்டு கட்டிப்போகாமல் கரைக்கவும்.
 2. அதை 1-2 மணி நேரம் எடுத்து வைக்கவும். இதற்கிடையில் சாதத்தோடு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து ஒன்றல்லது இரண்டு முறை அடித்துக்கொள்ளவும், சாதம் சாந்தாகத் தேவையில்லை.
 3. இப்போது ஒரு சாஸ் பாத்திரத்தில் கரைத்த கம்பை கொதிக்கவிட்டு, ஒன்றும்பாதியுமாக அரைத்த சாதத்தைச் சேர்த்து சற்றே அவை அடர்த்தியாகும்வரை வேகவைக்கவும். அடர்த்தியானதும், தீயை நிறுத்திவிட்டு அவற்றோடு மோரைச் சேர்க்கவும்.
 4. நன்றாக் கலந்து ஒரு மண் பானையில் அல்லது ஸ்டீல் பானையில் வைத்துக்கொள்ளவும்.
 5. அறையின் வெப்பத்தில் அல்லது சில்லென்றும் இந்தக் கூழை நீங்கள் பருகலாம்.
 6. கூழு நேரம் ஆக ஆக அடர்த்தியாகும் அதனால் போதுமானத் தண்ணீர் சேர்க்கவும்.
 7. கொஞ்சம் நறுக்கிய வெங்காயம் மாங்காய் தூவி பரிமாறுக.

எனது டிப்:

முருங்கைக்கீரைப் பொறியலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் ருசியாக இருக்கும்

Reviews for Kamban Koozhu | Bajra Porridge in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.