காஞ்சிபுரம் இட்லி | Kanchipuram Idli in Tamil

எழுதியவர் Menaga Sathia  |  11th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Kanchipuram Idli by Menaga Sathia at BetterButter
காஞ்சிபுரம் இட்லிMenaga Sathia
  • ஆயத்த நேரம்

    8

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

122

0

Video for key ingredients

    காஞ்சிபுரம் இட்லி recipe

    காஞ்சிபுரம் இட்லி தேவையான பொருட்கள் ( Ingredients to make Kanchipuram Idli in Tamil )

    • இட்லி அரிசி / பாதியாக வேகவைத்த அரிசி - 1கப்
    • பச்சரிசி - 1கப்
    • முழு வெள்ளை உளுந்து - 1 கப்
    • வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
    • உப்பு - சுவைக்கேற்ற அளவு
    • உலர்ந்த இஞ்சித் தூள் - 1தேக்கரண்டி
    • நெய் - 2 தேக்கரண்டி
    • தாளிப்புக்கு
    • நல்லெண்ணெய் - 2தேக்கரண்டி
    • மிளகு - 1தேக்ரண்டி (சற்றே பொடியாக்கப்பட்டது)
    • சீரகம் - 1தேக்கரண்டி
    • கறிவேப்பிலை - 2 கொத்து
    • முந்திரி பருப்பு - 10
    • பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

    காஞ்சிபுரம் இட்லி செய்வது எப்படி | How to make Kanchipuram Idli in Tamil

    1. அரிசி (இட்லி அரிசியையும் பச்சரிசையும்) உளுந்து, வெந்தயம் ஆகியவற்றைத் தனித்தனியே 5 மணி நேரங்களுக்கு ஊறவைக்கவும்.
    2. உளுந்தையும் வெந்தயத்தையும் ஒன்றாக சற்றே உப்பும் வரை அரைத்துக்கொள்ளவும். அரிசியை சற்றே கரடுமுரடானச் சாந்தாக ரவை போல அரித்துக்கொள்ளவும். இரண்டு மாவையும் உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
    3. மாவின் பதம் நீர்த்தோ அடர்த்தியாகவோ இருக்கக்கூடாது. மாவை சூடான இடத்தில் 6-7 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் நொதிக்கவிடவும். இப்போது நமது மாவு தயார், இட்லி ஊற்றுவதற்கு முன் மாவுடன் நெய்யும் உலர் இஞ்சித் தூளும் சேர்த்துக்கொள்ளவும்.
    4. ஒரு சிறிய கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி தாளிப்புக்கானச் சேர்வைப்பொருள்களைத் தாளித்து, தாளிப்பை மாவுடன் சேர்த்து நன்றாக மெதுவாக ஆனால் அதிகமாக் கலக்காமல் கலக்கவும்.
    5. இட்லி பானையில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, நான் எனது சிறிய டிபன் பாக்சில் நெய் தடவிப் பயன்படுத்தினேன். மாவை அதில் 1 மற்றும் 1/2 இன்ச் உயரத்திற்கு ஊற்றவும்.
    6. 10-15 நிமிடங்கள் பல்குச்சி/கத்தியை நுழைத்து சுத்தமாக வெளிவரும்வரை வேகவைக்கவும். 5 நிமிடங்கள் ஆறவிடவும்.
    7. கத்தியைப் பயன்படுத்தில் விளிம்புகளைத் தளர்த்தி மெதுவாக ஒரு தட்டில் திருப்பிக்கொட்டவும். இட்லியைத் தேவையான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும்.
    8. தேங்காய் சட்டினி, இட்லி பொடியுடன் சூடாகப் பரிமாறவும்.

    எனது டிப்:

    *வழக்கமாக இந்தக் கலவை குடலை இலை அல்லது மந்தாரை இலைகளை இட்லி பானையில் வைத்து வேகவைப்படும். ஆனால் சாதாரண இட்லித் தட்டுகளையும்கூட நீங்கள் பயன்படுத்தலாம். *வெந்தயத்தைத் தவிர்க்காதீர், இல்லையேல் ருசி மாறிவிடும்.

    Reviews for Kanchipuram Idli in tamil (0)

    சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.