வீடு / சமையல் குறிப்பு / காஞ்சிபுரம் இட்லி

Photo of Kanchipuram Idli by Menaga Sathia at BetterButter
226
25
4.0(0)
0

காஞ்சிபுரம் இட்லி

May-11-2016
Menaga Sathia
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • மற்றவர்கள்
 • தமிழ்நாடு
 • பாய்ளிங்
 • ஸ்டீமிங்
 • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. இட்லி அரிசி / பாதியாக வேகவைத்த அரிசி - 1கப்
 2. பச்சரிசி - 1கப்
 3. முழு வெள்ளை உளுந்து - 1 கப்
 4. வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
 5. உப்பு - சுவைக்கேற்ற அளவு
 6. உலர்ந்த இஞ்சித் தூள் - 1தேக்கரண்டி
 7. நெய் - 2 தேக்கரண்டி
 8. தாளிப்புக்கு
 9. நல்லெண்ணெய் - 2தேக்கரண்டி
 10. மிளகு - 1தேக்ரண்டி (சற்றே பொடியாக்கப்பட்டது)
 11. சீரகம் - 1தேக்கரண்டி
 12. கறிவேப்பிலை - 2 கொத்து
 13. முந்திரி பருப்பு - 10
 14. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

 1. அரிசி (இட்லி அரிசியையும் பச்சரிசையும்) உளுந்து, வெந்தயம் ஆகியவற்றைத் தனித்தனியே 5 மணி நேரங்களுக்கு ஊறவைக்கவும்.
 2. உளுந்தையும் வெந்தயத்தையும் ஒன்றாக சற்றே உப்பும் வரை அரைத்துக்கொள்ளவும். அரிசியை சற்றே கரடுமுரடானச் சாந்தாக ரவை போல அரித்துக்கொள்ளவும். இரண்டு மாவையும் உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
 3. மாவின் பதம் நீர்த்தோ அடர்த்தியாகவோ இருக்கக்கூடாது. மாவை சூடான இடத்தில் 6-7 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் நொதிக்கவிடவும். இப்போது நமது மாவு தயார், இட்லி ஊற்றுவதற்கு முன் மாவுடன் நெய்யும் உலர் இஞ்சித் தூளும் சேர்த்துக்கொள்ளவும்.
 4. ஒரு சிறிய கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி தாளிப்புக்கானச் சேர்வைப்பொருள்களைத் தாளித்து, தாளிப்பை மாவுடன் சேர்த்து நன்றாக மெதுவாக ஆனால் அதிகமாக் கலக்காமல் கலக்கவும்.
 5. இட்லி பானையில் தண்ணீரைக் கொதிக்கவைத்து, நான் எனது சிறிய டிபன் பாக்சில் நெய் தடவிப் பயன்படுத்தினேன். மாவை அதில் 1 மற்றும் 1/2 இன்ச் உயரத்திற்கு ஊற்றவும்.
 6. 10-15 நிமிடங்கள் பல்குச்சி/கத்தியை நுழைத்து சுத்தமாக வெளிவரும்வரை வேகவைக்கவும். 5 நிமிடங்கள் ஆறவிடவும்.
 7. கத்தியைப் பயன்படுத்தில் விளிம்புகளைத் தளர்த்தி மெதுவாக ஒரு தட்டில் திருப்பிக்கொட்டவும். இட்லியைத் தேவையான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும்.
 8. தேங்காய் சட்டினி, இட்லி பொடியுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்