திரங்க ஆப்பம் | Tiranga Appe in Tamil

எழுதியவர் Shreela Sasidharan  |  12th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Tiranga Appe by Shreela Sasidharan at BetterButter
திரங்க ஆப்பம்Shreela Sasidharan
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

114

0

Video for key ingredients

    திரங்க ஆப்பம் recipe

    திரங்க ஆப்பம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Tiranga Appe in Tamil )

    • சாந்தாக அரைக்கப்பட்ட கொத்துமல்லி இலைகள், 1/4 கப் வதக்கப்பட்டு சாந்தாக்கப்பட்ட பசலிக்கீரை அல்லது தினசரி பச்சை கொத்துமல்லி/ புதினா இலை சட்டினி
    • எண்ணெய் - தேவையான அளவு
    • வேகவைத்த பச்சைப் பட்டாணி - 1/4 கப்
    • கேரட் - நடுத்தர அளவு . மசிக்கப்பட்டது
    • இட்லி மாவு - 1 +1/2 கப்

    திரங்க ஆப்பம் செய்வது எப்படி | How to make Tiranga Appe in Tamil

    1. மாவை 3 சம பாகங்களாகப் பிரித்துக்கொள்ளவும்.
    2. பாகம் 1 - மசிக்கப்பட்ட கேரட்டோடு கலக்கவும்
    3. பாகம் 2 - பச்சைக் கலவையோடு கலந்துகொள்ளவும் - பச்சைப் பட்டாணி கலவை அல்லது பசலிக்கீரைக் கலவை அல்லது கீரையோடு நீங்கள் தயாரித்திருக்கவேண்டும்.
    4. பாகம் 3- அப்படியே எடுத்து வைக்கவும்
    5. இந்த வகையில் அனைத்து 3 நிறமேற்றப்பட்ட மாவுகளும் தயார்
    6. ஆப்பச் சட்டியைச் சூடுபடுத்தி, சூடானதும் சில துளிகள் எண்ணெய்யை ஒவ்வொரு குழியிலும் சேர்க்கவும்
    7. இப்போது கரண்டி முழுக்க வௌளை மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும், பாதியளவிற்கு மேலாக ஊற்றவும்.
    8. மூடி போட்டு இரண்டொரு நிமிடங்கள் வேகவைக்கவும்.
    9. மூடியைத் திறந்து, திருப்பிப்போட்டு அடுத்தப் பக்கத்தையும் சில நிமிடங்கள் வேகவைக்கவும். அதிகம் வேகவைக்கக்கூடாது, வெள்ளை நிறம் பழுப்பாகி கருகிவிடும்
    10. மீதமுள்ள 2 பாகங்களுக்கும் இதையே செய்க - ஆரஞ்சு மற்றும் பச்சை
    11. 3 நிறங்களில் அனைத்து ஆப்பங்களும் தயார். ரிரங்கா ஆப்பம் தயார். உங்களுக்குப் பிடித்த சட்டினியோடு பரிமாறவும்.

    எனது டிப்:

    குறிப்பு: போதுமான சாந்து/சட்டினி கலக்கப்படவேண்டும், அப்போதுதான் மாவு ஊற்றும் பதத்தில் இருக்கும். ஒருவேளை தண்ணீர் போல் இருந்தால் கொஞ்சம் ரசை அல்லது பொடி செய்யப்பட்ட ஓட்சைச் சேர்த்து, சில நிமிடங்கள் எடுத்துவைக்கவும், அப்போதுதான் ஊற்றும் பதத்திற்கு மாவு கிடைக்கும் - ஆப்பம் தயாரிக்க ஏதுவாக இருக்கும். இரண்டொரு நாட்கள் இட்லி தயாரித்த பிறகு மீந்துபோன மாவைக்கொண்டு தயாரிப்பேன், அது மகிழ்ச்சியாக அனுபவிக்கத் தக்க மாற்றத்தைக் கொடுக்கும்.

    Reviews for Tiranga Appe in tamil (0)

    சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.