வீடு / சமையல் குறிப்பு / கறி மசால் வடை

Photo of Kari Masal Vadai by Asiya Omar at BetterButter
541
1
0.0(0)
0

கறி மசால் வடை

Jun-08-2018
Asiya Omar
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கறி மசால் வடை செய்முறை பற்றி

மட்டன் அல்லது பீப் உடன் கடலை பருப்பு சேர்த்து செய்வது.நோன்பு கஞ்சிக்கு செம காம்பினேஷன்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • ஈத்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மட்டன் கீமா -100 கிராம்
  2. இஞ்சி பூண்டு விழுது -1 தேக்கரண்டி
  3. கரம் மசாலா - கால் தேக்கரண்டி
  4. கறி மசாலா -1 தேக்கரண்டி
  5. கடலை பருப்பு - 200 கிராம்
  6. இஞ்சி - பாக்களவு
  7. பூண்டு -2 பெரிய பல்
  8. சோம்பு பொடி -1/2 தேக்கரண்டி
  9. மிளகாய்ப்பொடி -1/2 தேக்கரண்டி
  10. மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
  11. மல்லி,கருவேப்பிலை,புதினா -சிறிது
  12. பச்சை மிளகாய் -2
  13. வெங்காயம் -100 கிராம்
  14. உப்பு - சுவைக்கு.
  15. எண்ணெய் பொரிக்க - தேவைக்கு

வழிமுறைகள்

  1. கடலை பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். அலசி தண்ணீர் வடித்து மட்டன் கீமா,இஞ்சி பூண்டு விழுது,கரம் மசாலா,கறி மசாலா,உப்பு மட்டும் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு வேகவைக்கவும் .தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
  2. கடலை பருப்பை,இஞ்சி பூண்டு,சோம்பு, வேக வைத்த கறி சேர்த்து பர பரவென அரைத்து எடுக்கவும்.
  3. அரைத்த கடலைபருப்பு,கொத்து கறியுடன் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி புதினா,மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,உப்பு கலந்து பிரட்டவும்.
  4. கடாயில் எண்ணெய் சூடு செய்யவும்.
  5. வடைகளாக தட்டி நான்கு நான்கு வடைகளாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  6. சூப்பரான கறி மசால் வடை தயார். நோன்பு கஞ்சி உடன் சாப்பிட சூப்பர் பொருத்தம்
  7. இப்தார் ஸ்பெசல் கறிமசால் வடை,எங்க ஊர் பிரசித்தம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்