வீடு / சமையல் குறிப்பு / சங்கரா மீன் குழம்பு

Photo of Sankara Meen Kuzhambu / Red Snapper Fish Kuzhambu by Priya Satheesh at BetterButter
5617
16
5.0(0)
0

சங்கரா மீன் குழம்பு

May-12-2016
Priya Satheesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1/2 கிலோ சங்கரா மீன், சுத்தப்படுத்தப்பட்டு கழுவப்பட்டது
  2. 2 பெரிய வெங்காயம், நன்றாக நறுக்கப்பட்டது
  3. 2 நடுத்தர அளவுள்ள தக்காளி, பொடியாக நறுக்கப்பட்டது
  4. 3 பச்சை மிளகாய், நறுக்கப்பட்டது
  5. 8 பூண்டு பற்கள், நசுக்கப்பட்டது
  6. ஆரஞ்சு அளவுள்ள புளி, தண்ணீரி்ல் ஊறவைத்தது
  7. 3 தேக்கரண்டி மிளகாய் - மல்லித்தூள்/ குழம்பு மிளகாய்த் தூள்
  8. சுவைக்கேற்ற உப்பு
  9. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  10. கொஞ்சம் கறிவேப்பிலை
  11. 3 தேக்கரண்டி நல்லெண்ணெய்
  12. 1 தேக்கரண்டி வெந்தயம்
  13. 1 தேக்கரண்டி சீரகம்
  14. 2 தேக்கரண்டி வடகம் வெந்தயம் சீரகத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்

வழிமுறைகள்

  1. ஒரு மண் பானையில் அல்லது கடாயில் எண்ணெய் சூடுபடுத்தி வெந்தயம், சீரகம் சேர்க்கவும். (வெந்தயம், சீரகத்திற்குப் பதிலாக வடகம் கூட சேர்க்கலாம்).
  2. பூண்டு பற்கள், பச்சை மிளகாய்களைத் தொடர்ந்து கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
  3. ஒரு சில விநாடிகள் வதக்கி நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்க்கவும்.
  4. வெளுக்கும் வரை வறுத்து நறுக்கப்பட்டத் தக்காளியைச் சேர்க்கவும்.
  5. நன்றாகக் கலந்து தக்காளி மென்மையாகும்வரை வேகவைக்கவும்.
  6. இப்போது மிளகாய் - மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
  7. ஊறவைத்த புளியில் இருந்து புளிக்கரைசலைப் பிழித்து வெங்காயத்தோடு சேர்க்கவும் - தக்காளிச் சாறு.
  8. கூடுதல் தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்க்கவும், தேவைப்பட்டால்.
  9. மூடி 10 நிமிடங்களுககு மிதமானச் சூட்டில் வேகவைக்கவும்.
  10. இப்போது மீனை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து பானையை மூடவும்.
  11. 5-6 நிமிடங்களுக்கு சிறு தீயி்ல் அல்லது மீன் வேகும்வரை வேகவைத்து அடுப்பிலிருந்து இறக்கிவைக்கவும்.
  12. கறிவேப்பிலையால் அலங்கரித்து சூடான சாதத்தோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்