சங்கரா மீன் குழம்பு | Sankara Meen Kuzhambu / Red Snapper Fish Kuzhambu in Tamil

எழுதியவர் Priya Satheesh  |  12th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Sankara Meen Kuzhambu / Red Snapper Fish Kuzhambu by Priya Satheesh at BetterButter
சங்கரா மீன் குழம்புPriya Satheesh
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

129

0

சங்கரா மீன் குழம்பு recipe

சங்கரா மீன் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Sankara Meen Kuzhambu / Red Snapper Fish Kuzhambu in Tamil )

  • 1/2 கிலோ சங்கரா மீன், சுத்தப்படுத்தப்பட்டு கழுவப்பட்டது
  • 2 பெரிய வெங்காயம், நன்றாக நறுக்கப்பட்டது
  • 2 நடுத்தர அளவுள்ள தக்காளி, பொடியாக நறுக்கப்பட்டது
  • 3 பச்சை மிளகாய், நறுக்கப்பட்டது
  • 8 பூண்டு பற்கள், நசுக்கப்பட்டது
  • ஆரஞ்சு அளவுள்ள புளி, தண்ணீரி்ல் ஊறவைத்தது
  • 3 தேக்கரண்டி மிளகாய் - மல்லித்தூள்/ குழம்பு மிளகாய்த் தூள்
  • சுவைக்கேற்ற உப்பு
  • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • கொஞ்சம் கறிவேப்பிலை
  • 3 தேக்கரண்டி நல்லெண்ணெய்
  • 1 தேக்கரண்டி வெந்தயம்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • 2 தேக்கரண்டி வடகம் வெந்தயம் சீரகத்திற்குப் பதிலாகப் பயன்படுத்தலாம்

சங்கரா மீன் குழம்பு செய்வது எப்படி | How to make Sankara Meen Kuzhambu / Red Snapper Fish Kuzhambu in Tamil

  1. ஒரு மண் பானையில் அல்லது கடாயில் எண்ணெய் சூடுபடுத்தி வெந்தயம், சீரகம் சேர்க்கவும். (வெந்தயம், சீரகத்திற்குப் பதிலாக வடகம் கூட சேர்க்கலாம்).
  2. பூண்டு பற்கள், பச்சை மிளகாய்களைத் தொடர்ந்து கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
  3. ஒரு சில விநாடிகள் வதக்கி நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்க்கவும்.
  4. வெளுக்கும் வரை வறுத்து நறுக்கப்பட்டத் தக்காளியைச் சேர்க்கவும்.
  5. நன்றாகக் கலந்து தக்காளி மென்மையாகும்வரை வேகவைக்கவும்.
  6. இப்போது மிளகாய் - மல்லித் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
  7. ஊறவைத்த புளியில் இருந்து புளிக்கரைசலைப் பிழித்து வெங்காயத்தோடு சேர்க்கவும் - தக்காளிச் சாறு.
  8. கூடுதல் தண்ணீர் சேர்த்து உப்பு சரிபார்க்கவும், தேவைப்பட்டால்.
  9. மூடி 10 நிமிடங்களுககு மிதமானச் சூட்டில் வேகவைக்கவும்.
  10. இப்போது மீனை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து பானையை மூடவும்.
  11. 5-6 நிமிடங்களுக்கு சிறு தீயி்ல் அல்லது மீன் வேகும்வரை வேகவைத்து அடுப்பிலிருந்து இறக்கிவைக்கவும்.
  12. கறிவேப்பிலையால் அலங்கரித்து சூடான சாதத்தோடு பரிமாறவும்.

Reviews for Sankara Meen Kuzhambu / Red Snapper Fish Kuzhambu in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.