கல்யாண ரசம் | Kalyana Rasam in Tamil

எழுதியவர் Nisha Ramesh  |  12th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Kalyana Rasam by Nisha Ramesh at BetterButter
கல்யாண ரசம்Nisha Ramesh
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

228

0

கல்யாண ரசம் recipe

கல்யாண ரசம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Kalyana Rasam in Tamil )

 • 3-4 கறிவேப்பிலை, பிய்த்துப்போட்டது
 • 1/4 கடுகு
 • 1 தேக்கரண்டி நெய்
 • 1 சிவப்பு மிளகாய்
 • 1/2 தேக்கரண்டி சீரகம்
 • 1 தேக்கரண்டி மிளகு
 • 3 தேக்கரண்டி துவரம் பருப்பு
 • 2 தேக்கரண்டி மல்லி
 • 1 தேக்கரண்டி நெய்
 • சுவைக்கேற்ற உப்பு
 • 2 தேக்கரண்டி துவரம் பருப்பு
 • 2 சிறிய அளவிலான தக்காளிகள்
 • 2 தேக்கரண்டி புளிக்கரைசல்

கல்யாண ரசம் செய்வது எப்படி | How to make Kalyana Rasam in Tamil

 1. பருப்பை பிரஷர் குக்கரில் மஞ்சள் தூளுடன் வேகவைக்கவும். விஸ்கைக்கொண்டு அல்லது கரண்டியின் பின்புறத்தால் நன்றாக மசித்துக்கொள்ளவும். ஒரு கப் தண்ணீர் அதனுடன் சேர்த்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 2. ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய்யைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.கடாயை மிதமானச் சூட்டிற்கும் அதிகமானத்தில் வைக்கவும். எண்ணெய் பிரிந்ததும், மல்லி, துவரம் பருப்பு, மிளகு சேர்த்து அவை பொன்னிறமானதும் மிளகாய் சேர்த்து, அடுப்பை நிறுத்தவும்.
 3. வறுத்த சேர்வைப்பொருள்களை ஆறவிட்டு சீரகத்தை அதனுடன் சேர்க்கவும். பவுடராக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 4. ஒரு சாஸ் பாத்திரத்தில், அகலமானப் பத்திரத்தைவிட உயரமானப் பாத்திரத்தில் தக்காளியை நசுக்கி, புளிக் கரைசலைச் சேர்த்து, 2 கப் தண்ணீர் உப்பு சேர்க்கவும். அதைக் கொதிக்கவிடவும், தக்காளி புளியின் பச்சைவாடை போகும்வரை.
 5. அதன்பிறகு பருப்பையும் ரசப்பொடியையும் சேர்க்கவும். மேற்பரப்பில் நுரைபொங்கத் துவங்கும்வரை சிம்மில் வைக்கவும்.
 6. இதற்கிடையில், ஒரு கிடாயில், ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். கடுகு சேர்த்து வெடிக்கவிடவும். அதன்பிறகு சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தீயை நிறுத்தவும். ஒரு சிட்டிகை பெருங்காயத்தை அதனுடன் சேர்த்து, ரசம் தயாரானதும் இதை அதன் மீது ஊற்றவும்.
 7. ரசம் பொங்க ஆரம்பித்ததும், தீயை நிறுத்திவட்டு தாளிப்பைச் சேர்த்து கொத்துமல்லியால் அலங்கரிக்கவும்.

எனது டிப்:

ரசத்தூள் ரொம்ப நாளைக்கு ஷெல்பில் வைக்க முடியாது. அதனால் அதிகப்பட்டியானதை இரண்டோரு நாளில் பயன்படுத்திவிடவும். வழக்கமான ரசத்தில்கூட சேர்க்கலாம். ரசம் சூப் போல இருக்கவேண்டும். ரசத்தூள் சேர்த்ததும் அடர்த்தியாகிவிடும். அதனால் அதிக தண்ணீர் சேர்க்கவும், தேவைப்பட்டால். நான் மொத்தமாகவே 4 கப் சேர்த்தேன்.

Reviews for Kalyana Rasam in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.