வீடு / சமையல் குறிப்பு / கீரை உளுந்து போண்டா

Photo of Keerai urad Dal bonda by Krishnasamy Vidya Valli at BetterButter
542
1
0.0(0)
0

கீரை உளுந்து போண்டா

Jun-10-2018
Krishnasamy Vidya Valli
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கீரை உளுந்து போண்டா செய்முறை பற்றி

எளிதில் செய்யும் ஸ்நாக்ஸ் வெரைட்டி. ஒருவருக்கு நான்கு வீதம் ஐந்து பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருட்டு உளுந்து -1/2 கப்
  2. அரிசி மாவு -2 மேஜைக்கரண்டி
  3. கீரை பொடியாக நறுக்கியது -1/3 கப்
  4. வெங்காயம் பொடியாக நறுக்கியது -1/8 கப்
  5. கேரட் பொடியாக நறுக்கியது -1/16 கப்
  6. தேங்காய் பொடியாக நறுக்கியது -1/16 கப்
  7. பச்ச மிளகாய் - 2 அல்லது 3
  8. இஞ்சி -1 சிறிய துண்டு
  9. கறிவேப்பிலை -2 ஆர்க்கு
  10. உப்பு -1 தேக்கரண்டி
  11. மிளகு சீரகப்பொடி -1/4 தேக்கரண்டி
  12. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. உளுந்தை களைந்து ஒருமணிநேரம் நன்றாக ஊறவைத்து கிரைண்டரில் நாற்பது முதல் அறுபது நிமிடங்கள் வரை தண்ணீர் சிறிது தெளித்து பந்து மாதிரி அரைத்துக்கொள்ளவும்
  2. அதனுடன் கொடுக்கப்பட்ட பொருட்கள் (எண்ணெய் தவிர) அனைத்தும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் வைத்து நன்றாக காய்ந்ததும் சிறிய போண்டாக்களாக பொரித்து எடுக்கவும்
  4. சட்னியுடன் பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்