வீடு / சமையல் குறிப்பு / தலப்பாக்கட்டி பிரியாணி

Photo of Thalapakatti biryani by Jayanthi Padmanabhan at BetterButter
1877
33
3.7(0)
0

தலப்பாக்கட்டி பிரியாணி

May-12-2016
Jayanthi Padmanabhan
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சீரக சம்பா அரிசி - 3 மற்றும் 1/2 கப்
  2. சிக்கன் - 700 கிராம்
  3. சிவப்பு மிளகாய் - 1-2 கப்
  4. சுவைக்கேற்ற உப்பு
  5. எண்ணெய் - 1/4கப்
  6. நெய் - 4 தேக்கரண்டி
  7. தேவையான அளவு தண்ணீர்
  8. பே இலைகள் / பிரியாணி இலைகள் -2
  9. கருப்பு ஏலக்காய் - 1
  10. மராத்தி மோகு - 2 துண்டு
  11. புதினா இலைகள் - : 1 கப் தளர்வாகப் பேக் செய்யப்பட்டது
  12. தயிர் 1/2கப்
  13. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  14. சுவைக்கேற்ற உப்பு
  15. சாம்பார் வெங்காயம் - 150 கிராம் தோலுரிக்கப்பட்டது (எளிதாகவும் வேகமாகவும் தோலை உரிப்பதற்கு தண்ணீர் உள்ள ஒரு பாத்திரத்தில் அவற்றை போட்டு 15 நிமிடங்கள் விடுவும். அதன்பிறகு மேல் பகுதியையும் கீழ் பகுதியையும் வெட்டிவிட்டு அதன்பிறகு தோல் உரிக்கவும்)
  16. பச்சை மிளகாய் 10-12 (காம்புகள் நீக்கப்பட்டு)
  17. கிராம்பு - 4
  18. பச்சை ஏலக்காய் -4
  19. இலவங்கப்பட்டை - 3 இன்ச் துண்டு
  20. பூண்டு - 1 தலை கிள்ளப்பட்டது
  21. இஞ்சி - 2 இன்ச் துண்டு தோலுரிக்கப்பட்டு நறுக்கப்பட்டது.

வழிமுறைகள்

  1. கோழியை நன்றாகச் சுத்தப்படுத்திக்கொள்ளவும். தட்டி உலர்த்தவும். ஒரு பெரிய பாத்திரத்தில் மஞ்சள் தூள், உப்பு, தயிர் சேர்த்து அடித்துக்கொள்ளவும். கோழித் துண்டுகளை தயிர் மேரினேட்டில் மூழ்கச் செய்து உங்கள் விரல்களால் தேய்த்து கோழித் துண்டுகள் முழுவதும் தடவி மேரினேட் செய்யவும். இரவு முழுவதும் பிரிட்ஜில் வைக்கவும்.
  2. சீரக சம்பா அரிசியை அலசி 20 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
  3. பிரியாணி மசலாவுக்குக் கீழ் உள்ள அனைத்துப் பொருள்களையும் தேவையான அளவு மட்டும் தண்ணீரைச் சேர்த்துச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும் (வெங்காயத்திலிருந்து ஆரம்பித்து இஞ்சிவரை)
  4. ஒரு பெரிய குக்கரை/ தட்டையான அடிப்பாகமுள்ள பாத்திரத்தைச் சூடுபடுத்தி எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும். எண்ணெய் நெய் சூடானதும், ஒட்டுமொத்த மசாலாக்களையும் சேர்க்கவும் - பே இலைகள், மராத்தி மோகு, கருப்பு ஏலக்காய் சேர்த்து வாசனை வரும்வரைக் காத்திருக்கவும்.
  5. அரைத்த மசாலாவை ஊற்றிக் கலக்கவும். மிதமானச் சூட்டில் அவ்வப்போது கலக்கி 3 நிமிடங்களுக்கு அல்லது பச்சை வாடை போகும்வரை வேகவைக்கவும்.
  6. மேரினேட்டுடன் மேரினேட் செய்யப்பட்ட சிக்கன் துண்டுகளைச் சேர்த்து சிக்கனையும் மசாலாவையும் சேர்க்கக் கலக்கவும். சிவப்பு மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். மூடியிட்டு சிறு தீயில் எண்ணெய் பிரிந்து மிதக்கும்வரை 15 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  7. ஊறிய தண்ணீரை வடிக்கட்டி கரண்டியால் ஊறவைத்த அரிசியை சிக்கன் மசாலாவில் போடவும். அரிசி உள்ளுக்குள் போடப்பட்டதும், ஊறவைத்த தண்ணீரை அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமா உங்கள் ஆட்காட்டி விரல் தண்ணீரில் நுழைக்கப்பட்டு அரிசியைத் தொடும்வரை ஊற்றவும்.
  8. அரிசியின் மீது திரவத்தின் அளவு ஒரு இன்ச் அளவு இருக்கவேண்டும். திரவத்தைச் சுவைபார்த்து உப்புக்காரம் பதம் பார்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
  9. ஒரு பெரிய தட்டையானத் தட்டைக்கொண்டு குக்கரை/பிரியாணி பாத்திரத்தை மூடவும். தீயை அடக்கவும். கொதிக்கும் நீருள்ள ஒரு பெரிய பாத்திரத்தை தட்டின் மீது வைக்கவும். கொதிநீர் உள்ள பாத்திரத்தை மூடவும்.
  10. இந்த அமைப்பு அதன் மாயா ஜாலத்தைச் செய்ய விட்டுவிடவும். 20 நிமிடங்களுக்குள் வாசனை உங்களை சுண்டி இழுக்கும். அடுப்பை நிறுத்தி, திறந்து முள் கரண்டியால் பிரட்டிப்போட்டு மீண்டும் மூடவும், கொதிநீர் பாத்திரத்தை மீண்டும் மேலே வைத்து பிரியாணியைச் சூடாக வைத்துக்கொள்ளவும். ரைத்தா, வேகவைத்த முட்டையுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்