வீடு / சமையல் குறிப்பு / ஆட்டிறைச்சி முருகைக்காய் குருமா

Photo of Mutton Drumstick korma by Jayanthi Padmanabhan at BetterButter
4871
24
3.7(0)
0

ஆட்டிறைச்சி முருகைக்காய் குருமா

May-12-2016
Jayanthi Padmanabhan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஆட்டிறைச்சி 1/2 கிலோ, அலசப்பட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கப்பட்டது
  2. முருங்கைக்காய் 1 துண்டு 1 மற்றும் 1/2 இன்ச் துண்டுகளாக வெட்டப்பட்டது
  3. வெங்காயம் - 2 நடுத்தர அளவிலானது பொடியாக நறுக்கப்பட்டது
  4. தக்காளி - 2 பெரிய அளவிலானது மசிக்கப்பட்டது
  5. இஞ்சி - 2 இன்ச் துண்டு தோல் நீக்கப்பட்டு நறுக்கப்பட்டது பூண்டு 7-8 பற்கள் தோலுரிக்கப்பட்டது
  6. பச்சை மிளகாய் - 2 சீரற்று நறுக்கப்பட்டது
  7. இலவங்கப்பட்டை - 2 இன்ச் துண்டு பட்டை
  8. பே இலை - 1
  9. ஏலக்காய் - 2
  10. தேவையான அளவு தண்ணீர்
  11. தேங்காய் பால் - 2 கப் ( ஒரு முழு தேங்காயில் இருந்து பிழிந்தெடுக்கப்பட்டது)
  12. சுவைக்கேற்ற உப்பு
  13. சிவப்பு மிளகாய்த்தூள் - 2-3 குவியல் தேக்கரண்டி.
  14. மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி
  15. சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை சாந்தாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். தக்காளிச் சாந்தைத் தயாரித்துக்கொள்ளவும். எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. பிரஷர் குக்கரைச் சூடுபடுத்திக்கொள்க. சூடானதும் இலவங்கப்பட்டை, ஏலக்காய் பே இலை போட்டி வாசனை வரும்வரை வறுக்கவும்.
  3. நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்த்து வெளுக்கும்வரை வறுக்கவும். இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் சாந்து சேர்த்து ஒரு சில நிமிடங்கள் வறுத்து கலக்கிக்கொள்ளவும்.
  4. ஆட்டிறைச்சியையும் மசாலா தூள்களையும் சேர்க்கவும் - சிவப்பு மிளகாய் தூள், உப்பு, மஞ்சள் தூள். தக்காளி சாறை ஊற்றிக்கொள்ளவும். போதுமானத் தண்ணீர் சேர்க்கவும், ஆட்டிறைச்சி மூழ்கும்வரை, நன்றாக கலக்கவும். பிரஷர் குக்கரை மூடி 15-20 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  5. அடுப்பை நிறுத்திவிட்டு பிரஷரைக் குறைக்கவிடவும். பிரஷர் குக்கரைத் திறந்து முருங்கைக்காய் துண்டுகளைப் போடவும். தேங்காய்ப் பாலை ஊற்றவும்.
  6. அடுப்பைப் பற்ற வைத்து தீயைக் குறைக்கவும். மூடியிட்டு அல்லது பிரஷர் குக்கரின் மூடியைத் திருப்பிப்போட்டு 5-8 நிமிடங்கள் முருங்கைக்காய் மிருதுவாகும்வரை வேகவைக்கவும் (முருங்கைக்காயில் ஒரு கத்தியை நுழைத்தால், எளிதாக நுழையவேண்டும்)
  7. சுவை பார்த்து உப்புக் காரத்தைச் சரிசெய்யவும். மூடியை நீக்கி மேலும் 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும், குருமாவை அடர்த்தியாக்கவேண்டும் என்றால். இட்லி, தோசை, சாதம் அல்லது பூரியுடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்