பருப்பு உருண்டைக் குழம்பு | Parupu urundai kozhambu in Tamil

எழுதியவர் Priya Mani  |  13th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Parupu urundai kozhambu by Priya Mani at BetterButter
பருப்பு உருண்டைக் குழம்புPriya Mani
 • ஆயத்த நேரம்

  2

  மணிநேரம்
 • சமைக்கும் நேரம்

  60

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

260

0

பருப்பு உருண்டைக் குழம்பு recipe

பருப்பு உருண்டைக் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Parupu urundai kozhambu in Tamil )

 • உருண்டைக்கு:
 • துவரம்பருப்பு - 3/4 கப்
 • காய்ந்த மிளகாய் - 4ல் இருந்து 5
 • சோம்பு - 1 தேக்கரண்டி
 • சீரகம் - 3/4 தேக்கரண்டி
 • உப்பு - 3/4 தேக்கரண்டி
 • சின்ன வெங்காயம் - 10
 • மெலிதாக நறுக்கப்பட்ட பூண்டு - 2
 • மெலிதாக நறுக்கப்பட்ட (விருப்பம் சார்ந்தது) தேங்காய்
 • துருவப்பட்ட - 3 தேக்கரண்டி
 • குழம்புக்கு:
 • மசாலா சாந்து: சோம்பு - 1 தேக்கரண்டி
 • சீரகம் - 3/4 தேக்கரண்டி
 • முந்திரி பருப்பு -5
 • தேங்காய் - 1/4 கப்
 • எண்ணெய் - 1 தேக்கரண்டி
 • கடுகு
 • பூண்டு பற்களை மத்தியில் பிளந்துகொள்ளவும் - 5 (சிறிய அளவிலானதைத் தேர்ந்தெடுக்கவும்)
 • 1/3 தேக்கரண்டி சோம்பு
 • 1/3 தேக்கரண்டி கறிவேப்பிலை
 • 1/3 தேக்கரண்டி சீரகம்
 • தக்காளி - 2
 • புளி 1 எலுமிச்சை அளவு
 • 1 கொத்து
 • சின்ன வெங்காயம் - 7

பருப்பு உருண்டைக் குழம்பு செய்வது எப்படி | How to make Parupu urundai kozhambu in Tamil

 1. வழிமுறைகள்: உருண்டைக்கு: துவரம் பருப்பைத் தோராயமாக 3 மணி நேரங்களுக்கு ஊறவைக்கவும். பருப்பு மிருதுவாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், உப்பு ஆகியவற்றை ஒரு மிக்சர் ஜாடியில் எடுத்துக்கொள்ளவும். மென்மையாக அரைத்துக்கொள்ளவும். அதன்பிறகு ஊறவைத்த பருப்பை கரடுமுரடானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
 2. அரைத்தக் கலவையோடு மற்றப் பொருள்களையும் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும். உப்பு சரிபார்க்கவும். சமமான உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளவும். பொன்னிறமாகும்வரை அல்லது 10இல் இருந்து 15 நிமிடங்களுக்கு எண்ணெயில் பொறித்தெடுக்கவும். எடுத்து வைக்கவும்.
 3. குழம்புக்கு: எண்ணெயைச் சூடுபடுத்திக் கடுகு, சீரகம், சோம்பைப் பொறிக்கவிடவும். கறிவேப்பிலையைச் சேர்த்துக் கலக்கவும். இப்போது வெங்காயத்தையும் பூண்டையும் சேர்க்கவும். அதிக சூட்டில் சில நிமிடங்கள் கலக்கி வறுக்கவும். அதன்பிறகு நறுக்கப்பட்ட தக்காளியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். புளித் தண்ணீரைச் சேர்க்கவும்.
 4. மசலா சாந்து சேர்த்து மூடியிட்டு சிம்மில் கொஞ்சம் நேரம் வைக்கவும். மெதுவாக வறுத்த அல்லது வேகவைத்த உருண்டையை (ஒன்றன்பின் ஒன்றாக) குழம்பில் போடவும். சிம்மில் 10 நிமிடங்களுக்கு வைக்கவும்.
 5. இதற்குள், உருண்டை சுவையையும் மணத்தையும் பெற்றிருக்கும்; அடர்த்தியாகவும் மாறியிருக்கும். குழம்பு மிகவும் அடர்த்தியாக இருந்தால், கொதிக்கும் தண்ணீரை தேவையானப் பதத்திற்குச் சேர்க்கவும். நன்றாக நறுக்கப்பட்ட கொத்துமல்லித் தழைகளை சேர்த்து ஆவி பறக்க சூடாகப் பரிமாறவும்.

Reviews for Parupu urundai kozhambu in tamil (0)