வீடு / சமையல் குறிப்பு / ப்ரோக்கோலி மிளகு வறுவல் சமையல் குறிப்பு/புரதம் நிறைந்த சைட் டிஷ்

Photo of Broccoli Pepper Fry Recipe| Protein Rich Side Dish by Sabari Sankari at BetterButter
3331
81
5.0(0)
0

ப்ரோக்கோலி மிளகு வறுவல் சமையல் குறிப்பு/புரதம் நிறைந்த சைட் டிஷ்

May-13-2016
Sabari Sankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புரோகோலி - 1/2 தலை, நடுத்தர அளவுள்ள பூக்களாகப் பிரிக்கப்பட்டது
  2. வெங்காயம் - 1 நடுத்தர அளவிலானது நறுக்கப்பட்டது
  3. தக்காளி - 1 நடுத்தர அளவிலானது நறுக்கப்பட்டது
  4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  5. இலவங்கப்பட்டை நசுக்கப்பட்டது - சிறியது
  6. கறிவேப்பிலை - கையளவு
  7. கறி மசாலா தூள் - 1 தேக்கரண்டி
  8. மிளகுத் தூள் - 1/4 தேக்கரண்டியும் இன்னும் சற்று அதிகமாகவும்
  9. உப்பு சுவைக்கேற்ற அளவு
  10. எண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தவும். கொஞ்சம் உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதி வந்ததும், புரோக்கோலி பூக்களைச் சேர்த்து தீயை அணைக்கவும். 1 நிமிடம் அப்படியே இருக்கட்டும். அதற்கு மேல் வேண்டாம். புரோகோலியை வடிக்கட்டி குளிர்ந்த நீரில் கழுவவும். இது அதை விரைப்பாக்கிவிடும்.
  2. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி நசுக்கப்பட்ட இலவங்கப்பட்டையையும் கறிவேப்பிலையையும் சேர்க்கவும். அவை வெடிக்கட்டும். வெங்காயம் சேர்த்து அது வெளுக்கும் வரை வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாடை போகும் வரை வதக்கவும். தக்காளி சேர்த்து அவை மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
  3. புரோகோலி பூக்களைச் சேர்த்துக் கொஞ்சம் வதக்கவும். கறி மசாலா தூள் கொஞ்சம் உப்பு சேர்க்கவும். பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
  4. கடாயை மூடி சிறு தீயில் அவை வேகட்டும். இது 2 நிமிடங்கள் ஆகும். மூடியை நீக்கிவிட்டு மெதுவாக வதக்கவும்.
  5. மிளகு சேர்த்து கொஞ்சம் வதக்கி தீயை நிறுத்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்