வீடு / சமையல் குறிப்பு / வாழைப் பூ உசிலி

Photo of Plantain flower usili (stir fry) by Adaikkammai Annamalai at BetterButter
513
1
0.0(0)
0

வாழைப் பூ உசிலி

Jun-11-2018
Adaikkammai Annamalai
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைப் பூ உசிலி செய்முறை பற்றி

வாழை பூ ஆய்வது சிறிது பெரிய வேலைதான்,, ஆனால் அது மிக பெரிய மருந்தாகும்,, நான் எல்ல வேலையும் முடித்த பின் டிவி் பார்கும் பொழுது முதல் நாளே ஆய்ந்து நரம்பு ஏடுத்து சிறிது உப்பு போட்ட தண்ணீரில் கட் செய்து போட்டு பிரிட்ஜில் வைத்து விடுவேன் கருக்காமல் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆய்ந்த வாழைப்பூ – 1
  2. கடலைப்பருப்பு – 1 கப்
  3. துவரம்பருப்பு – கால் கப்
  4. வரமிளகாய் – 4 அல்லது 5
  5. சீரகம் – ½ தேக்கரண்டி
  6. பெருங்காயம் – சிறிதளவு
  7. உப்பு – தேவையான அளவு
  8. எண்ணெய் – தேவையான அளவு
  9. கறிவேப்பிலை – சிறிதளவு
  10. கடுகு - சிறிதளவு

வழிமுறைகள்

  1. வாழைப்பூவை நன்கு ஆய்ந்து பொடிப்பொடியாக நறுக்கி தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது உப்பு போட்டுக் கொள்ளவும். எலுமிச்சை சாறு விடுவதால் கருத்துப் போகாமல் இருக்கும்.
  2. கடலைப்பருப்பையும், துவரம்பருப்பையும் தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஊறிய பருப்பை தண்ணீரை வடித்து விட்டு மிக்சியில் வரமிளகாய், சீரகம், பெருங்காயத்துடன் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
  3. அரைத்த பருப்பை குக்கரில் வேக வைத்த 10-லிருந்து 12 நிமிடங்கள் ஆவியில் வைத்து எடுத்துக் கொள்ளவும். ஆறியவுடன் கையால் உதித்து விடவும்
  4. கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும். அதில் உதிர்த்த பருப்பு சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்
  5. பிறகு இதனுடன் வாழைப்பூவை பிழிந்து போட்டு தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு வதக்கி எடுத்தால் சுவையான, சத்தான வாழைப்பூ பருப்புசிலி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்