வீடு / சமையல் குறிப்பு / வரகு அரிசி அதிரசம்

Photo of Kodo millet athirasam by Adaikkammai Annamalai at BetterButter
767
2
0.0(0)
0

வரகு அரிசி அதிரசம்

Jun-11-2018
Adaikkammai Annamalai
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வரகு அரிசி அதிரசம் செய்முறை பற்றி

பல நாடுகளில் வரகுதான் பாரம்பரிய உணவாகப் பயன்பாட்டில் உள்ளது. வரகு தானியத்தின் தோலில், ஏழு அடுக்குகள் உண்டு. இதைப் பறவைகள், ஆடு, மாடுகளால் உண்ண முடியாது. கிராமங்களில் உரலில் இட்டு வெகுநேரம் இடிப்பார்கள். வறண்ட பகுதியில் கூட விளையக்கூடிய தன்மை இதற்கு உண்டு. இதன் விதை ஆயிரம் வருடங்கள் வரைக்கும் முளைப்புத் திறன் கொண்டது. இதில் அதிக அளவு நார்ச் சத்து மற்றும் மாவுச் சத்து உண்டு. சீக்கிரத்திலேயே செரித்துவிடும் தன்மை இதன் சிறப்பு.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வரகு அரிசி - 2 cups
  2. வெல்லம் - 1 cups
  3. எண்ணெய் - பொரிப்பதற்கு
  4. ஏலக்காய் - சிறிது

வழிமுறைகள்

  1. முதலில் வரகு அரிசியை தண்ணீரில் ஊறவைத்து, மிக்ஸியில் அரைத்து, சல்லடையால் சலித்துக்கொள்ளவும்
  2. பின் நாட்டு வெல்லத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து பாகு காய்ச்சவும். 
  3. பாகு பதம் வந்தவுடன் சலித்து வைத்திருந்த மாவை அடுப்பை சிமில் வைத்து பாகுடன் சேர்த்து கிண்டவும்,, நன்றாக கிளறிய பின் அடுப்பை அணைத்து கெட்டியாக கிளறி வைக்கவும்
  4. பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி அதில் கிளரிய மாவை ஊற்றி ஒரு நாள் முழுவதும் மாவு உறவு சேர வைக்கவும்
  5. பின் இந்த மாவை சிறு உருண்டையாகப் பிடித்து, இலையில் போட்டுத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  6. பொன்னிறமாக பொரிந்த பின் எடுத்து பரிமாறலாம்,,, சுவையான வரகு அரிசி அதிரசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்