Photo of Fish samosa by Yasmin Shabira at BetterButter
561
1
0.0(0)
0

மீன் சமோசா

Jun-11-2018
Yasmin Shabira
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் சமோசா செய்முறை பற்றி

மீன் வடிவில் ஆன மொறு மொறு சமோசா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா மாவு : 2 கப்
  2. வெங்காயம் : 5
  3. கேரட் : 200 கிராம்
  4. பச்சை பட்டாணி : 1 கப்
  5. மஞ்சள் தூள் : 1/2 தேக்கரண்டி
  6. மிளகாய் தூள் : 1 மேசைக்கரண்டி
  7. ஜீரகதூள் : 1 தேக்கரண்டி
  8. உப்பு : தேவையான அளவு
  9. எண்ணெய் : பொறிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மைதா மாவில் 1 தேக்கரண்டி அளவு உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  2. பிசைந்த மாவை சிறிது நேரம் ஈரத்துணியால் மூடி வைக்கவும்
  3. ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. கண்ணாடியாக வதங்கியதும் கேரட் மற்றும் பச்சை பட்டாணி சேர்க்கவும்
  5. உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஜீரகதூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதங்க விட்டபின் இறக்கவும்
  7. பிசைந்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து படத்தில் உள்ளது போல் விரித்து கொள்ளவும். அதில் நடுவில் படத்தில் உள்ளது போன்ற வடிவில் ஸ்டஃபிங் வைக்க வேண்டும்
  8. மாவை படத்தில் உள்ளது போல கீற வேண்டும்
  9. வலது பக்கம் உள்ள முதல் பாகத்தை ஸ்டஃபிங் மேல் வைக்கவும்
  10. பின்னர் இடது பக்கம் உள்ள முதல் பாகத்தை அதன் மேல் வைத்து மூடவும்
  11. ஒரு தேக்கரண்டி அளவு மைதாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொண்டு அதை இரண்டு பக்கமும் தடவி கொள்ள வேண்டும்
  12. கீறப்பட்ட அடுத்தடுத்த பாகங்களை ஒவ்வொன்றாக பின்னல் போல மடித்து கொள்ளவும்
  13. இவ்வாறு மடித்தபின் கடைகி வால் பகுதியில் அடியில் ஒரு ஃபோர்க்கால் லேசாக அழுத்தி விடவும்
  14. கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு வந்ததும் செய்து வைத்த மீன் சமோசாக்களை நன்றாக சிவக்க பொறித்து எடுக்கவும்
  15. அவ்வளவு தான் சுவையான அழகான மீன் சமோசா தயார்!!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்