வீடு / சமையல் குறிப்பு / காரக் குழம்பு

Photo of Kara Kuzhambu by Manjula Bharath at BetterButter
9120
47
4.2(0)
0

காரக் குழம்பு

May-13-2016
Manjula Bharath
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சிம்மெரிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு - 1 (வேகவைத்தது)
  2. முருங்கைக்காய் - 6 துண்டுகள்
  3. கத்திரிக்காய் - 2 நறுக்கப்பட்டது
  4. வெங்காயம் - 1/4 கப் (நறுக்கப்பட்டது)
  5. தக்காளி -1 (நறுக்கப்பட்டது)
  6. சிவப்பு மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் - `1/4 தேக்கரண்டி
  8. சீரகம் - 1/4 தேக்கரண்டி
  9. மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  10. புளி - 1 எலுமிச்சை அளவு
  11. பூண்டு - 1 பற்கள் (நசுக்கப்பட்டது)
  12. எண்ணெய் - 2 தேக்கரண்டி
  13. கடுகு - 1/2 தேக்கரண்டி
  14. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  15. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. 1/2 கப் தண்ணீரில் 15 நிமிடங்களுக்கு புளியை ஊறவைத்து மசித்து, புளிக்கரைசலை எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி, கடுகு, சீரகம், சேர்த்து அவற்றைப் பொறிக்கவிடவும்.
  3. நசுக்கப்பட்ட பூண்டு வெங்காயத்தைச் சேர்த்து வெங்காயம் வெளுக்கும்வரை வதக்கவும்.
  4. நறுக்கப்பட்ட தக்காளியைச் சேர்த்து அவை கூழாகும்வரை வதக்கவும்.
  5. கத்திரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து அவை பாதியளவு வேகும்வரை வதக்கவும்.
  6. சிவப்பு மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.
  7. 2 கப் அல்லது அதிகமாகத் தண்ணீர் சேர்க்கவும், காய்கறிகள் (கத்திரிக்காய், முருங்கைக்காய்) முழுமையாக வேகட்டும்.
  8. அதன்பின்னர் நறுக்கப்பட்டு வேகவைக்கப்பட்ட உருளைக்கிழங்கு புளிக்கரைசலைத் தொடர்ந்து உப்பு சேர்த்து வேகவைக்கவும். அவை அனைத்தையும் நன்றாகக் கலக்கவும்.
  9. குழம்பு கொதிக்கட்டும், சிம்மில் சிறிது நேரம் விடவும், தேவையான பதம் அப்போதுதான் கிடைக்கும். எண்ணெய் குழம்பின் மேல் மிதக்கவேண்டும்.
  10. குழம்பு சற்றே அடர்த்தியானதும், அடுப்பை நிறுத்தவும்.
  11. ஆவி பறக்கும் சாதம் மற்றும் பப்படத்தோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்