வீடு / சமையல் குறிப்பு / இறால காய்கறி குழம்பு

Photo of Eral Kaikari Kuzhambu / Prawn Veggie Kuzhambu by Priya Satheesh at BetterButter
2141
10
0.0(0)
0

இறால காய்கறி குழம்பு

May-13-2016
Priya Satheesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
31 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 250 கிராம் இறால்
  2. 1 தேக்கரண்டி எண்ணெய்
  3. 2 தேக்கரண்டி வடகம் (மாற்று - கடுகு, வெந்தயம், சீரகம்)
  4. 1 கப் வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
  5. 5 பூண்டு பற்கள், நசுக்கப்பட்டது
  6. 1/2 கப் தக்காளி, பொடியாக நறுக்கப்படடது
  7. 2 உருளைக்கிழங்கு சதுரமாக நறுக்கப்பட்டது
  8. 1 முருங்கைக்காய், துண்டுபோடப்பட்டது
  9. 5 கத்திரிக்காய், சதுரமாக நறுக்கப்பட்டது
  10. 1/4 மஞ்சள் தூள்
  11. 1 1/2 - 2 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி
  12. 3 தேக்கரண்டி மல்லித்தூள்
  13. எலுமிச்சை அளவு புளி, 1 கப் தண்ணீரில் ஊறவைத்து சாறு பிழிந்தெடுக்கப்பட்டது
  14. கையளவு கறிவேப்பிலை
  15. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி வடகத்தைச்சேர்த்து அதனுடன் நசுக்கப்பட்ட பூண்டு மற்றும் பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயத்தையும் சேர்க்கவும்.
  2. ஒரு நிமிடத்திற்கு அல்லது நிறம் பொன்னிறமாகும்வரை வதக்கவும்.
  3. கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து பொடியாகத் தக்காளியை நறுக்கிக்கொண்டதையும் சேர்க்கவும்.
  4. ஒரு நிமிடம் அல்லது தக்காளி மிருதுவாகும்வரை வறுக்கவும்.
  5. கொடுக்கப்பட்டுள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்த்து நன்றாக் கலக்கவும்.
  6. மஞ்சள் தூளுடன் மிளகாய்த் தூள் மல்லித்தூளையும் இப்போது சேர்க்கவும்.
  7. நன்றாகக் கலந்து பச்சை வாடை போகும்வரை வறுக்கவும்.
  8. புளிக்கரைசலோடு தேவையான உப்பையும் சேர்க்கவும்.
  9. 1/2 -1 கப் தண்ணீர் சேர்த்து மூடி காய்கறிகள் 3/4 பாகம் வேகும்வரை வேகவைக்கவும்.
  10. இதற்கிடையில், இறாலைச் சுத்தப்படுத்தி நரம்பை எடுத்துவிட்டுக் கழுவவும்.
  11. சுத்தப்படுத்தப்பட்ட இறாலை குழம்பில் சேர்த்து மேலும் 5 நிமிடம் மிதமானச் சூட்டில் வேகவைக்கவும்.
  12. மீதமுள்ள கறிவேப்பிலையைச்சேர்த்து அடுப்பை நிறுத்தவும்.
  13. சூடான சாதத்துடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்