வீடு / சமையல் குறிப்பு / வெற்றிலைக் குழம்பு

Photo of Vetrilai Kuzhambu / Betel Leaves Kuzhambu by Priya Satheesh at BetterButter
2402
9
0.0(0)
0

வெற்றிலைக் குழம்பு

May-13-2016
Priya Satheesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 8-10 வெற்றிலை, சிறுசிறு பட்டைகளாக நறுக்கிக்கொள்ளப்பட்டது
  2. 2 வெங்காயம் நடுத்தர அளவுள்ளது நறுக்கப்பட்டது
  3. 10 பூண்டு பற்கள், தோல் உரிக்கப்பட்டது
  4. 1 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி
  5. 1 தேக்கரண்டி மிளகுத்தூள்
  6. 1 தேக்கரண்டி மல்லித்தூள்
  7. 1 தேக்கரண்டி சீரகத்தூள்
  8. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  9. சுவைக்கேற்ற உப்பு
  10. எலுமிச்சை அளவு புளி (10 நிமிடங்கள் ஊறவைத்து, அதிலிருந்து சாறை பிழிந்து எடுக்கவும்)
  11. 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் (1 தேக்கண்டி வறுப்பதற்கும் 1 தேக்கரண்டி குழம்புக்கும்)
  12. 1 தேக்கரண்டி வடகம்
  13. 2 கொத்து கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி நறுக்கப்பட்ட வெங்காயத்தோடு பூண்டையும் சேர்க்கவும்.
  2. ஒரு நிமிடத்திற்கு வறுத்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  3. மிளகாய்த் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள்,மஞ்சள் தூள் சேர்த்து அவற்றுடன் வறுத்த வெங்காயம் பூண்டை சேர்க்கவும்.
  4. சிறிது தண்ணீர் விட்டு சாந்தாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. மீத முள்ள 1 தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி வடாகத்தையும் கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.
  6. அரைத்த சாந்தைச் சேர்த்து ஒரு சில நிமிடங்கள் வதக்கி அல்லது எண்ணெய் மசாலாவிலிருந்து பிரியும் வரை வதக்கவும்.
  7. இப்போது புளிக்கரைசலையும், தேவையான தண்ணிர் உப்பையும் சேர்த்துக்கொள்ளவும்.
  8. நன்றாகக் கலந்து 10 நிமிடங்களுக்கு மிதமானச் சூட்டில் கொதிக்கவிடவும்.
  9. வெற்றிலை இலைத் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வேகவைக்கவும்.
  10. அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்