வீடு / சமையல் குறிப்பு / வெண்பொங்கல்

Photo of Ven Pongal by Priya Satheesh at BetterButter
1297
37
0.0(0)
0

வெண்பொங்கல்

May-13-2016
Priya Satheesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 1 கப் பச்சரிசி
  2. 1/2 கப் பாசிப்பயிர்
  3. 4 1/2 கப் தண்ணீர்
  4. சுவைக்கேற்ற உப்பு
  5. 1/4 மஞ்சள் தூள்
  6. 10-15 முந்திரிபருப்புகள்
  7. 1 தேக்கரண்டி சீரகம்
  8. 1 தேக்கரண்டி மிளகு
  9. 1 தேக்கரண்டி நசுக்கப்பட்ட மிளகு
  10. 1 இன்ச் இஞ்சித் துண்டு, நறுக்கப்பட்டு நசுக்கப்பட்டது
  11. 5 தேக்கரண்டி நெய்

வழிமுறைகள்

  1. பாசிப்பயிரை கொஞ்சம் நெய் விட்டு வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அரிசியையும் பருப்பையும் சேர்த்து கழுவி அளவானத் தண்ணீர் சேர்த்து 5-6 விசில்களுக்கு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.
  3. ஆவி அடங்கியதும், திறந்து அரிசியை மசித்துக்கொள்ளவும்.
  4. ஒரு சிறிய கடாயில் நெய்யைச் சூடுபடுத்தி சீரகத்தோடு மிளகு, முந்திரி பருப்பு, நசுக்கப்பட்ட இஞ்சி, கறிவேப்பிலை, நசுக்கப்பட்ட மிளகையும் சேர்க்கவும்.
  5. தாளிப்பை மசிக்கப்பட்ட அரிசியோடு கலந்து நன்றாகக் கலக்கவும்.
  6. உப்பு சரிபார்த்து, நறுமணத்திற்காகக் கூடுதல் நெய் சேர்க்கவும்.
  7. சட்டினி மற்றும் சாம்பாருடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்