வீடு / சமையல் குறிப்பு / தட்டு வடை (தட்டை)(2types)

Photo of Thattu vadi or Thattai by Balajayasri Dhamu at BetterButter
1131
2
0.0(0)
0

தட்டு வடை (தட்டை)(2types)

Jun-12-2018
Balajayasri Dhamu
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தட்டு வடை (தட்டை)(2types) செய்முறை பற்றி

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகை இதை இரண்டு முறைகளில் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கடினம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. செய்முறை 1
  2. இட்லி அரிசி ஒரு கிலோ
  3. பொட்டு கடலை மாவு1/4
  4. டால்டா100கி
  5. மிளகாய் தூள்தேவையான அளவு
  6. எள்2தேக்கரண்டி
  7. கடலைப்பருப்பு 50கி
  8. பாசிப்பருப்பு25கி
  9. எண்ணெய் பொரிப்பதற்கு
  10. தேவையான அளவு உப்பு
  11. செய்முறை 2
  12. பச்சரிசி ஒரு கிலோ
  13. பொட்டுக்கடலை மாவு 1டம்ளர்

வழிமுறைகள்

  1. செய்முறை 1
  2. புழுங்கல் அரிசி இரண்டு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  3. கடலைப்பருப்பு பாசிப்பருப்பு இரண்டையும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 1/2மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  4. ஊறிய அரிசியை கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  5. மாவு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
  6. அரைத்தவற்றை பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்
  7. பொட்டுக்கடலை மாவு கால் கிலோ சேர்த்துக் கொள்ளவும்
  8. டால்டாவை காய்ச்சி ஊற்றி கொள்ளவும்
  9. தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  10. ஊறிய கடலை பருப்பு பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்துக் கொள்ளவும்
  11. அனைத்தையும் நன்றாக கலந்து பிசைந்து கொள்ள வேண்டும்
  12. ஒரு பாலிதீன் கவரில் எண்ணெய் தடவி சிறிது மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்
  13. பாலித்தீன் கவரில் சிறுசிறு உருண்டைகளை தட்டி
  14. வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்தவுடன் தட்டிய வடைகளைப் போடவும்
  15. நன்றாக வெந்தவுடன் எடுத்து விடவும்
  16. இப்போது சுவையான தட்டு வடை ரெடி
  17. செய்முறை 2
  18. பச்சரிசி ஒரு கிலோவை தண்ணீரில் கழுவிக் கொள்ள வேண்டும்
  19. கொஞ்ச நேரம் அதை நன்கு தண்ணீர் வடித்து துணியில் போட்டு பரப்பி விடவும்
  20. ஈரமான அரிசியை கொண்டு சென்று அரைத்து வரவும்
  21. அரைத்து வந்தவற்றில் 4 டம்ளர் அரிசி மாவை எடுத்துக் கொள்ளவும்
  22. மாவை வாணலியில் போட்டு நன்கு புரட்டி அரசி மாவு எடுத்தால் கோலம் போடுமாறு வர வேண்டும்
  23. இதனுடன் ஒரு டம்ளர் பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் கொள்ளவும்
  24. மீதி மேலே கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசைந்து சிறு உருண்டைகளாக தட்டி எண்ணெயில் போட்டு எடுக்கவும்
  25. இப்போது மற்றொரு முறையான தட்டு வடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்