வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் கட்லெட்

Photo of Chicken cutlet by Rabia Hamnah at BetterButter
359
2
0.0(0)
0

சிக்கன் கட்லெட்

Jun-12-2018
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் கட்லெட் செய்முறை பற்றி

இப்தார் ஸ்பெஷல் மற்றும் குழந்தைகளுக்கான உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • ஈத்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் -150 கிராம்
  2. பெரிய வெங்காயம் -2 நறுக்கியது
  3. உருளைக்கிழங்கு -2
  4. பச்சைமிளகாய் -2
  5. கறிவேப்பிலை, கொத்தமல்லி கொஞ்சம்
  6. மஞ்சள் தூள் -அரை ஸ்பூன்
  7. மிளகாய் தூள் -இரண்டு ஸ்பூன்
  8. கரம் மசாலா -ஒரு ஸ்பூன்
  9. முட்டை -ஒன்று
  10. பிரட் தூள்-1/2 கப்

வழிமுறைகள்

  1. சிக்கனுடன் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்
  2. பின்பு ஆற வைத்து அதை மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்
  3. கொரகொரப்பாக அரைக்கவும்
  4. உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்
  5. வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்
  6. பச்சை மிளகாய் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும்
  7. முட்டையுடன் சிறிது உப்பு மிளகுத்தூள் சேர்த்து அடித்து வைக்கவும்
  8. பிரட் தூளை ஒரு தட்டில் கொட்டி பரப்பி வைக்கவும்
  9. முட்டை பிரட் தூள் தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக சேர்ந்து கலந்து வைக்கவும்
  10. பின்பு கலந்த கலவையை விரும்பிய வடிவில் உருண்டையாகவும் நீளமாகவும் பிடித்துவைக்கவும்
  11. பின்பு ஒவ்வொன்றாக முட்டையில் முக்கி பிரட் தூளில் பிரட்டி ஒரு தட்டில் வைக்கவும்
  12. 30 நிமிடம் ஃப்ரீசரில் வைத்து விடவும்
  13. பின்பு எண்ணையை காய வைத்து பொரித்து எடுக்கவும்
  14. சுவையான சிக்கன் கட்லெட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்