வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் சீஸ் பால்

Photo of Chicken Cheese ball by Rabia Hamnah at BetterButter
964
2
0.0(0)
0

சிக்கன் சீஸ் பால்

Jun-12-2018
Rabia Hamnah
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் சீஸ் பால் செய்முறை பற்றி

சிக்கன், சீஸ் என்றாலே குழந்தைகளுக்கு பிடிக்கும். அதிலும் இப்படி செய்து கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் 100 கிராம்
  2. உருளைக்கிழங்கு 2
  3. பெரிய வெங்காயம் 2
  4. கறிவேப்பிலை கொத்தமல்லி கொஞ்சம்
  5. உப்பு- தேவைக்கு
  6. பச்சைமிளகாய் 2
  7. சீஸ் க்யூப்ஸ்- தேவையானவை
  8. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  10. கரம் மசாலா ஒரு ஸ்பூன்
  11. எண்ணெய் பொரிக்க
  12. முட்டை ஒன்று
  13. பிரெட் தூள் ஒரு கப்

வழிமுறைகள்

  1. சிக்கனை மிக்ஸியில் போட்டு அரைத்து வைக்கவும்
  2. உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைக்கவும்
  3. வெங்காயம் கருவேப்பிலை பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்
  4. முட்டையுடன் உப்பு மிளகுத்தூள் சேர்த்து அடித்து வைக்கவும்
  5. பிரெட் தூளை ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்
  6. பின்பு முட்டை, பிரட் தூள் , எண்ணெய், சீஸ் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலந்து வைக்கவும்
  7. கலவையை ஒவ்வொரு உருண்டையாக பிடித்து நடுவில் சீஸ் வைத்து மூடி விடவும்.
  8. பின்பு முட்டையில் முக்கு பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் பொறித்து எடுக்கவும்.
  9. சுவையான குழந்தைகள் விரும்பும் சிக்கன் சீஸ் பால் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்