வீடு / சமையல் குறிப்பு / சேனைக்கிழங்கு கல் வறுவல்

Photo of Yam tawa fry (less oil) by Thiraviam P at BetterButter
708
3
0.0(0)
0

சேனைக்கிழங்கு கல் வறுவல்

Jun-13-2018
Thiraviam P
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சேனைக்கிழங்கு கல் வறுவல் செய்முறை பற்றி

சேனைக்கிழங்கில் பல வகைகள் உண்டு.சதையின் நிறம் இளம் மஞ்சள் (ஆந்திராசேனை), அடர் பழுப்பு, இளம் சிகப்பு (கேரளா). இதில் ஆந்திரா, கேரளா சேனைகள் தான்சமையலுக்கு உகந்தது. கெட்டியானது,கனமானது. நமச்சல் (அரிப்பு) குறைவு. மாவுபோல் நன்றாக வேகும், ருசி அதிகம். மற்றவை மிருதுவானது, கனமாக இருக்காது.நமச்சல் அதிகம். நன்றாக வேகாது.நறுக்கென்றே இருக்கும். எனவே தெரிந்து வாங்க வேண்டும்.  மரக்கறி உணவில் கிழங்குகள் முக்கியமாகதிகழ்கின்றது. இது கிழங்கு வகைகளுள் நீண்டகாலம்வைத்திருந்து பயன்படுத்தக் கூடியது. ஆறு முதல் எட்டு மாதங்கள்வரை இக்கிழங்குகெட்டுவிடாமல் இருக்கும். யானைக்கால் போல் பெரிதாக இருப்பதால்‘யானைக்கால் கிழங்கு’ என்ற பெயரும்உண்டு. ஆப்பிரிக்காவில் தோன்றி படிப்படியாகஉலகம் முழுவதும் பரவியது. உலக அளவில் நைஜீரியா அதிக அளவில்உற்பத்தி செய்கின்றது. இலட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்களின்பசியைப் போக்கும் முக்கிய உணவாகசேனைக்கிழங்கு இருந்து வருகிறது.குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் நல்லஉணவு மருந்து. இது உடலை வலுவடையச் செய்யும். பெண்கள் முப்பது நாட்களும் பயம் இல்லாமல் சேனைக்கிழங்கைச் சேர்த்துக் கொள்ளலாம். கெடுதல் எதுவும்செய்யாத கிழங்கு இது. சேனைக் கிழங்குகள் பல்வேறு கிழக்கு ஆசியநாடுகளில் மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றது. பூமிக்கடியில் புதையலாய் பொதிந்து கிடக்கும்காய்கறிகளில்,  இதில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது. பெண்களின் சத்து மாத்திரை என்றே கூறலாம் இது ஸ்டார்ச் நிறைந்த டையோஸ்கோரா ஜீனஸ் இனத்தின் வேர் ஆகும். வேரில் சத்துக்களை சேமிக்கும் கிழங்குவகைகாய்கறிகளில், கார்போஹைட்ரேட் நிறைந்த  கிழங்குவகைகளில் மிகவும் முக்கியமானது. சேனைக்கிழங்கில் வைட்டமின் சத்துக்களும்  மற்றும் புரதச்சத்துக்களும்  அதிகம் நிறைந்துள்ளது. இதில் தாமிரம், கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், போன்ற பல்வேறு தாதுக்கள் உள்ளன. இரும்பு சத்து இரத்த சிவப்பணு உருவாக்கத்திற்கு உதவி புரிந்து, இரத்த சோகையை தடுக்கிறது. வைட்டமின்-B யின் உறைவிடமான சேனைக்கிழங்கு, நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை அதிகரிக்கவும் உதவியாக இருக்கும். சேனைக் கிழங்கில் அதிக அளவிலான விட்டமின்-Cசத்து இருப்பதால் எலும்புகளை வலுவாக்கும் மற்றும்நுரையீரல் நோய்களை குணப்படுத்தும். இதில் உள்ள விட்டமின்-A தோலைபளபளப்பாக்குகின்றது. கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்து இருப்பதால்மலச்சிக்கலை குறைக்கிறது. கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்புவறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றைஇக்கிழங்கு குணமாக்குகிறது. சர்க்கரையின் அளவை சம நிலையில் வைப்பதிலும்உதவியாக இருக்கும். மிகக் குறைந்த அளவே பீட்டா கரோட்டின் மற்றும்கொழுப்பு சத்துகள் அடங்கி உள்ளது. அதனால் இதையார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1. சேனைக்கிழங்கு - 500 கிராம்  
  2. 2. மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்  
  3. 3. மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்  
  4. 4. கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்  
  5. 5. அரிசி மாவு - 1  டேபிள் ஸ்பூன்
  6. 6. கல் உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
  7. 7. கடலை எண்ணெய் - 4  டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. சேனைக்கிழங்கின்  தோலை கத்தியினால் முழுவதும் சுரண்டி எடுக்கவும். (சேனையில் தோலை சுரண்டுவதற்கும், தோசை கல்லில் போட்டு எடுப்பதற்கும் பொறுமை தேவை தான். ஆனால் பொறுமைக்கான பலன் வருவலில் கிடைக்கும். எல்லோரும் தோலை சீவி, எண்ணெயில் பொரித்தெடுத்து வெலையை முடித்து விடுவார்கள)
  2. பின், ஒரு இன்ச் அளவில், கால் இன்ச் கனத்தில் பட்டை பட்டையாக வெட்டி தண்ணீரில் போடவும்.
  3. மண், அழுக்கு போக சுத்தமாக கழுவவும். உப்பு, பாதி மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். நன்கு வெந்தவுடன் தண்ணீரை வடிக்கவும். சிறிது ஆறிய பின், 2-லிருந்து 5-வரை உள்ள பொருட்களை பிசிறி, வெட்டிய துண்டுகள் உடையாமல் கிளறவும். உப்பு தேவைப்பட்டால் சேர்க்கலாம்.
  4. 30நிமிடம் ஊறவிடவும். பிறகு தோசை கல்லில்  1 டீஸ்பூன் எண்ணெய் தேய்த்து விட்டு, ஊற வைத்த கிழங்கை கொஞ்சமாக போட்டு, வெந்த பின் அனைத்தையும் திருப்பி போட்டு பொன்னிறமாக எடுக்கவும்.
  5. இவ்வாறு அனைத்தையும் கல்லில் போட்டு எடுத்து மொறுமொறு வருவலாக பரிமாறலாம்.
  6. எளிய முறையில் தொசை கல்லில் போடாமல், சிறிது எண்ணெய் கலந்து, Microwave oven convection mode-ல் 12 நிமிடம் வைத்து எடுத்தால், அதிக மொறு மொறுப்பான வருவல் குறைந்த எண்ணெயில் சமைக்கலாம். Microwave oven-ல் சமைத்ததை படத்தில் காணலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்