வீடு / சமையல் குறிப்பு / உளுந்து வடை/ மெதுவடை

Photo of Medu vadai by Rabia Hamnah at BetterButter
537
0
0.0(0)
0

உளுந்து வடை/ மெதுவடை

Jun-13-2018
Rabia Hamnah
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

உளுந்து வடை/ மெதுவடை செய்முறை பற்றி

நம் நாட்டு பாரம்பரிய தின்பண்டம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. உளுந்து 200 கிராம்
  2. சின்ன வெங்காயம் 10
  3. பெரிய வெங்காயம் ஒன்று
  4. பச்சைமிளகாய் 2
  5. மிளகு-2 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை இரண்டு கொத்து
  7. இஞ்சி -ஒரு இன்ச்
  8. எண்ணெய்- பொறிக்க
  9. உப்பு- தேவைக்கு

வழிமுறைகள்

  1. உளுந்தை 2 to 4 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. மாவை அரைத்து வைக்கவும். தண்ணீரை சிறிது தெளித்து அரைக்கவும்.
  3. வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை பொடியாக நறுக்கி வைக்கவும்
  4. இஞ்சியை துருவி வைக்கவும்
  5. பின்பு மாவுடன் அனைத்தையும் சேர்க்கவும்
  6. தேவைக்கு உப்பு மற்றும் மிளகு சேர்த்து மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்
  7. தேவைக்கு எண்ணெய் கடாயில் சேர்த்து சூடு செய்யவும்
  8. பின்பு கையை தண்ணீரில் முக்கி கொண்டு எலுமிச்சை அளவு மாவை எடுத்து கொள்ளவும்
  9. இப்பொழுது பெருவிரலை கொண்டு நடுவில் ஓட்டை விட்டு காய்ந்ததும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  10. சுவையான உளுந்து வடை தயார்
  11. நன்றாக மொறுமொறுப்பாக வேண்டுமானால் இரண்டு ஸ்பூன் சேமியாவை மிக்ஸியில் திரித்து மாவுடன் சேர்த்துக் கொள்ளலாம் ருசியாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்