வீடு / சமையல் குறிப்பு / சுரைக்காய் லாலிபாப்

Photo of Lauki lollypops by saranya sathish at BetterButter
310
0
0.0(0)
0

சுரைக்காய் லாலிபாப்

Jun-13-2018
saranya sathish
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுரைக்காய் லாலிபாப் செய்முறை பற்றி

சுரைக்காய் துருவல் பயன்படுத்தி செய்த ஸ்நேக்ஸ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சுரைக்காய் துருவல் - 1 கப்
  2. பன்னீர் துருவல் - 1/2 கப்
  3. சீஸ் துருவல் - 1/4 கப்
  4. உப்பு - தேவையான அளவு
  5. கரம் மசாலா - 1 டீஸ்பூன்
  6. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
  7. சீரகம் தூள் - 1/4 டீஸ்பூன்
  8. பிரட் கிரம்ஸ் - 1 கப்
  9. சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  10. கொத்தமல்லி இலை - சிறிது
  11. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் சுரைக்காய் துருவலில் இருந்து தண்ணீரை நன்றாக வடித்து கொள்ளவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வடித்த சுரைக்காய்,பன்னீர் துருவல், சீஸ் துருவல், மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகம் தூள், உப்பு, சிறிது பிரட் கிரம்ஸ் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  3. பின் சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும். பின் ஒரு தட்டில் பிரட் கிரம்ஸ் சேர்க்கவும்.
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு செய்யவும்.
  6. பின் உருண்டைகளை கரைத்த மாவில் முக்கி பிரட் கிரம்ஸில் பிரட்டி எடுக்கவும்.
  7. இந்த உருண்டையை எண்ணெயில் போட்டு நன்றாக பொரித்து எடுக்கவும்.
  8. பின்னர் லாலிபாப் குச்சியில் சொருகி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்