வீடு / சமையல் குறிப்பு / வெஜ் கட்லெட்

Photo of Veg cutlet by Revathi Reva at BetterButter
318
0
0.0(0)
0

வெஜ் கட்லெட்

Jun-13-2018
Revathi Reva
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜ் கட்லெட் செய்முறை பற்றி

காய்கறிகள் சேர்ந்த சத்தான மாலை நேர ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உருளைகிழங்கு 3
  2. கேரட், பீன்ஸ், பட்டாணி ஒரு கப்
  3. வெங்காயம் 1
  4. பச்சைமிளகாய்1
  5. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  6. தனியாதூள் 1ஸ்பூன்
  7. சாட் மசாலா 1ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  9. பிரெட் க்ரம்ஸ் 1 கப்+½கப்
  10. மைதா 2 ஸ்பூன்
  11. உப்பு
  12. கொத்தமல்லி சிறிது
  13. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கு, பட்டாணி வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். கேரட், பீன்ஸ் பொடியாக நறுக்கி வதக்கி சிம்மில் வேக விடவும்
  3. வெந்ததும் மசித்த உருளைகிழங்கு, பட்டாணி சேர்த்து வதக்கவும். தூள் வகைகளை சேர்க்கவும். நன்கு கட்டி இல்லாமல் மசித்து விடவும் 1/2 கப் பிரட் க்ரம்ஸ் சேர்த்து இறக்கி ஆற விடவும்.
  4. மைதாவை ஒரு பவுலில் கரைத்து கொள்ளவும். ஆறவைத்த காய்கறிகளை விரும்பிய வடிவில் உருட்டி மைதா கரைசலில் முக்கி பிரட்க்ரம்ஸில் பிரட்டி வைக்கவும்.
  5. பேனில் எண்ணெய் விட்டு இரண்டு புறமும் சிவக்க வேக விட்டு எடுக்கவும்.
  6. வெஜ் கட்லெட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்