செட்டிநாடு வெங்காய கொஸ்து | Chettinad Vengaya Kosu in Tamil

எழுதியவர் Jinoo Jayakrishnan  |  14th May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Chettinad Vengaya Kosu by Jinoo Jayakrishnan at BetterButter
செட்டிநாடு வெங்காய கொஸ்துJinoo Jayakrishnan
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

318

0

Video for key ingredients

 • Sambhar Powder

 • How to make Idli/Dosa Batter

செட்டிநாடு வெங்காய கொஸ்து recipe

செட்டிநாடு வெங்காய கொஸ்து தேவையான பொருட்கள் ( Ingredients to make Chettinad Vengaya Kosu in Tamil )

 • வெங்காயம் 2, நறுக்கப்பட்டது
 • தக்காளி 1, நறுக்கப்பட்டது
 • பூண்டு 2 பற்கள்
 • இஞ்சி ஒரு இன்ச்
 • கசகசா 1 தேக்கரண்டி
 • பெருஞ்சீரகம் 2 தேக்கரண்டி
 • தேங்காயத் துருவல் 1/2 கப்
 • மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
 • சாம்பார் பொடி 1 தேக்கரண்டி
 • சுவைக்கேற்ற உப்பு
 • தேவையான அளவு எண்ணெய்

செட்டிநாடு வெங்காய கொஸ்து செய்வது எப்படி | How to make Chettinad Vengaya Kosu in Tamil

 1. வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை வெங்காயம் பிங் நிறமாக மாறும் வரை வதக்கவும்.
 2. வதக்கிய கலவையை தேங்காய், கசகசா, பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டியுடன் அரைத்துக்கொள்ளவும்.
 3. ஒரு குக்கரில் எண்ணெயைச் சூடுபடுத்தி, பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி வதக்கவும். நறுக்கப்பட்ட தக்காளியைச் சேர்த்து கூழாக வதக்கிக்கொள்ளவும்.
 4. இவற்றோடு அரைத்த சாந்தைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். மஞ்சள் தூள், சாம்பார் தூள் அல்லது கறி மசாலா பவுடர், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
 5. 3-4 விசில்களுக்கு வேகவைத்து, நறுக்கப்பட்ட கொத்துமல்லியால் அலங்கரிக்கவும். இட்லி/தோசையுடன் சூடாகப் பரிமாறவும்.

எனது டிப்:

தக்காளியை வதக்கிய பிறகு உருளைக்கிழங்குத் துண்டுகளைச் சேர்க்கலாம். சாம்பார் பொடிக்குப் பதிலாக கறி மசாலா தூள் அல்லது மிளகாய்ப்பொடியைச் சேர்க்கலாம், ஆனால் சுவை மாறும். பெரிய வெங்காயத்திற்குப் பதிலாகச் சின்ன வெங்காயத்தை சிறப்பானச் சுவைக்குச் சேர்க்கலாம். அப்போது 1 கப் சின்ன வெங்காயம் பயன்படுத்தவேண்டும்.

Reviews for Chettinad Vengaya Kosu in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.