வீடு / சமையல் குறிப்பு / தென்னிந்திய பாணி பீட்ரூட் பொறியல்

Photo of South Indian Style Beetroot Poriyal by Poonam Bachhav at BetterButter
9463
65
4.2(0)
0

தென்னிந்திய பாணி பீட்ரூட் பொறியல்

May-15-2016
Poonam Bachhav
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 2 நடுத்தர அளவு பீட்ரூட் பொடியாக நறுக்கப்பட்டது
  2. 2 தேக்கரண்டி கடலை பருப்பு
  3. 2 தேக்கரண்டி பிளந்த தோலுரித்த கருப்பு உளுந்து (வெள்ளை உளுந்து)
  4. 2 தேக்கரண்டி துருவப்பட்ட தேங்காய்
  5. 2 தேக்கரண்டி எண்ணெய்
  6. 1/4 தேக்கரண்டி சீரகம்
  7. ஒரு சிட்டிகை பெருங்காயம்
  8. 1/4 மஞ்சள் தூள்
  9. 1 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  10. சுவைக்கேற்ற உப்பு
  11. 2 கொத்து புதிய கொத்துமல்லி

வழிமுறைகள்

  1. கடலைப் பருப்பையும் உளுந்தையும் கழுவி 10 நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைக்கவும். இதற்கிடையில் பீட்ரூட்டைத் தோலுரித்து பொடியாக சதுர வடிவில் நறுக்கிக்கொள்ளவும்.
  2. ஒரு வானலியை மிதமானச் சூட்டில் சூடுபடுத்தி 2 தேக்கரண்டி எண்ணெயை அதனுள் சேர்க்கவும். சீரகத்தோடு புதிய கறிவேப்பிலை சேர்க்கவும். ஒரு சிட்டிகை பெருங்காயம், மஞ்சள் சேர்க்கவும். ஊறவைத்து வடிக்கட்டிய கடலைப்பருப்பையும் உளுந்தையும் சேர்க்கவும். ஒரு நிமிடம் அல்லது அதற்கும் மேல் கலக்கவும்.
  3. நறுக்கப்பட்ட பீட்ரூட்டைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உப்பு சிவப்பு மிளகாய் சேர்க்கவும். முறையாகக் கலந்து மூடி 5-7 நிமிடங்கள் வேகவைக்கவும். கடைசியாக துருவப்பட்ட புதிய தேங்காயைச் சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பை நிறுத்து.
  4. சப்பாதி அல்லது பூரியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்