வீடு / சமையல் குறிப்பு / வெங்காய ரவா ஊத்தாப்பம்

Photo of Onion Rawa Uttapam by Archana Bhargava at BetterButter
1767
85
4.8(0)
0

வெங்காய ரவா ஊத்தாப்பம்

May-15-2016
Archana Bhargava
210 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் ரவை
  2. 2 தேக்கரண்டி அரிசி மாவு
  3. 2 தேக்கரண்டி உளுத்து மாவு
  4. 2 தேக்கரண்டி தயிர்
  5. சுவைக்கேற்ற உப்பு
  6. தேவையான அளவு தண்ணீர்
  7. மேலே தூவுவதற்கு:
  8. 2 வெங்காயம், பொடியாக நறுக்கப்பட்டது
  9. 3 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கப்பட்டது
  10. கொத்துமல்லி 2 தேக்கரண்டி பொடியாக நறுக்கப்பட்டது
  11. தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு கலவைப் பாத்திரத்தை எடுத்து ரவை, அரிசி மாவு, உளுந்து மாவு, தயிர் ஆகியவற்றைக் கலந்துகொள்ளவும்.
  2. நடுத்தர அடர்த்தியில் மாவைத் தயாரித்து மூடி நொதிப்பதற்காக 3 மணி நேரம் விட்டுவைக்கவும்.
  3. ஊத்தாப்பத்தை ஊற்றுவதற்கு முன் உப்பைச் சரிபார்க்கவும்.
  4. தவாவைச் சூடுபடுத்த எண்ணெய் தடவு, மென்மையானத் துணியால் அல்லது டிஸ்யூ பேப்பரால் சமமாக வெங்காயத் துண்டுகொண்டு துடைக்கவும்.
  5. மாவை மையத்தில் ஊற்றி கரண்டியால் வட்ட அசையில் பரவச் செய்யவும், ஒரு வட்டுபோல்.
  6. வெங்காயம், பச்சை மிளகாய், நறுக்கப்பட்ட கொத்துமல்லியை மேலே தூவவும்.
  7. பக்கங்களில் கொஞ்சம் எண்ணெய் விடவும். 2-3 நிமிடங்கள் ஒரு பக்கம் வேகவைக்கவும்.
  8. அதன்பிறகு அடுத்தப் பக்கத்தினைத் திருப்பி. பக்கங்களில் மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடவும்
  9. மேலும் 3-4 நிமிடங்கள் சிறு தீயில் வேகவைக்கவும்.
  10. பரிமாறும் தட்டில் எடுத்துக்கொள்ளவும். இதை எந்த சட்டினி அல்லது உங்களுக்குப் பிடித்த சாம்பாருடன் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்