வீடு / சமையல் குறிப்பு / சாதம் டிரை ப்ருட் நட் பால்ஸ்

Photo of Rice dry fruit and nut balls by saranya sathish at BetterButter
415
0
0.0(0)
0

சாதம் டிரை ப்ருட் நட் பால்ஸ்

Jun-14-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சாதம் டிரை ப்ருட் நட் பால்ஸ் செய்முறை பற்றி

வெகவைத்த சாதம்,பாதாம், முந்திரி, திராட்சை, பேரிச்சம் பழம்,வெல்லம் சேர்த்து செய்த இனிப்பு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. குழைய வேகவைத்த சாதம் - 1/2 கப்
  2. பாதாம் - 2 டேபிள் ஸ்பூன்
  3. முந்திரி - 2 டேபிள் ஸ்பூன்
  4. திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்
  5. பேரிச்சை பழம் - 2
  6. வெல்லம் - 1 டேபிள் ஸ்பூன்
  7. எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
  8. பிரட் கிரம்ஸ் - 1/2 கப்

வழிமுறைகள்

  1. முதலில் மிக்ஸியில் டிரை ப்ருட் நட்டை சேர்த்து சற்று கொறகொறப்பாக அரைக்கவும்.
  2. பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி, சாதம்,வெல்லம் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  3. பின்னர் பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு செய்யவும்.
  5. எண்ணெய் சூடானதும் உருட்டிய உருண்டைகளை பிரேட் கிரம்ஸில் பிரட்டி எண்ணெயில் போட்டு நன்றாக இருபுறமும் பொன்னிறமாக வேகவைத்து பின்னர் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்