Photo of Jalebi by Raihanathus Sahdhiyya at BetterButter
490
1
0.0(0)
0

ஜிலேபி

Jun-14-2018
Raihanathus Sahdhiyya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஜிலேபி செய்முறை பற்றி

இந்தியாவின் பாரம்பரிய பண்டிகைக் கால இனிப்பு வகைகளில் நீங்கா இடம் பிடிப்பது ஜிலேபி. அனைவரின் நாவிலும் நீரூற வைக்கும் சுவையான ஜிலேபியின் எளிதான செய்முறை இதோ!!

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • இந்திய
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு: 1 கப்
  2. இன்ஸ்டன்ட் ஈஸ்ட்: 1/2 தேக்கரண்டி
  3. சர்க்கரை: 1 1/2 கப் + 1/2 தேக்கரண்டி
  4. நெய்: 2 தேக்கரண்டி
  5. மஞ்சள் தூள்: 1/2 தேக்கரண்டி
  6. தண்ணீர்: 1 கப்
  7. ஏலக்காய்: 2−3
  8. எண்ணெய்: பொறிக்க
  9. எலுமிச்சை சாறு: 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரில் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்து கலக்கி 15 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
  2. அச்சமயம், ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும். அதில் ஏலக்காய் சேர்க்கவும். பிசுபிசுப்பான லேசான கம்பிப் பதம் வந்தவுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, மஞ்சள் தூள் மற்றும் நெய் சேர்த்து கலந்து, நுரைத்த ஈஸ்ட் கலவையை சேர்த்து கலக்கவும்.
  4. பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் விழாமல் தோசை மாவு போல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
  5. அந்த மாவை ஒரு பாட்டிலில் ஊற்றி அதன் மூடியில் நடுவில் ஒரு துளையிட்டு பாட்டிலில் பொருத்தவும்.
  6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமாக சூடானதும் பாட்டிலில் உள்ள மாவை வட்ட வடிவமாக ஜிலேபிகளாக சுடவும்
  7. பொன்னிறமானவுடன் ஜிலேபிகளை கரண்டி கொண்டு எடுத்து உடனடியாக சர்க்கரைப் பாகில் போட்டு 1−2 நிமிடம் ஊறவிட்டு எடுத்து பரிமாறவும். (பொறுமையாக எண்ணெயை வடித்து பிறகு பாகில் போட்டால் ஜிலேபி ஒழுங்காக ஊறாது)

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்