வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் பால் பணியாரம்

Photo of Coconut Milk Paniyaram by Sowmya Sundar at BetterButter
501
1
0.0(0)
0

தேங்காய் பால் பணியாரம்

Jun-15-2018
Sowmya Sundar
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் பால் பணியாரம் செய்முறை பற்றி

உளுந்து மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து செய்த மிகவும் சத்தான ,சுவையான பணியாரம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உளுத்தம் பருப்பு அரை கப்
  2. பச்சரிசி அரை கப்
  3. உப்பு ஒரு சிட்டிகை
  4. தேங்காய்ப் பால் ஒன்றரை கப்
  5. பால் அரை கப்
  6. சர்க்கரை அரை கப்
  7. ஏலக்காய் பொடி கால் டீஸ்பூன்
  8. குங்குமப்பூ சிறிது
  9. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. அரிசி மற்றும் உளுந்தை களைந்து தண்ணீர் விட்டு 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பின்னர் மிக்ஸி அல்லது கிரைண்டரில் இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.மாவு சிறிது கெட்டியாக இருக்க வேண்டும்.சிட்டிகை உப்பு போட்டு கலந்து கொள்ளவும்.
  3. பாலில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும்.பின் அதனுடன் தேங்காய் பால் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்கவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு லேசாக நிறம் மாறி வெந்ததும் எடுத்து டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் வடிய விடவும்
  5. சர்க்கரை சேர்த்த பாலில் உளுந்து உருண்டைகளை போட்டு ஐந்து நிமிடங்கள் ஊற விட்டு குங்குமப்பூ தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்