வீடு / சமையல் குறிப்பு / காளான் ப்ரை

Photo of Mushroom fry by Balajayasri Dhamu at BetterButter
515
3
0.0(0)
0

காளான் ப்ரை

Jun-15-2018
Balajayasri Dhamu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காளான் ப்ரை செய்முறை பற்றி

காளான் மிகவும் சத்தான உணவு. இதை நாம் ரோட்டு கடைகளில் வாங்கி சாப்பிடுகிறோம். அதை விட சிறப்பாக நாம் நம் விட்டிலேயே செய்து நம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம் அது மட்டுமல்ல ரோட்டு கடைகளில் விற்கப்படும் காளான் ப்ரை காளான் இல்லை அது முட்டை கோஸ் பயன்படுத்தி செய்கின்றனர்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காளான் வறுதெடுக்க தேவையானவை
  2. காளான் 6
  3. கான்பிளவர் 2 தேக்கரண்டி
  4. மைதா அ கோதுமை மாவு 4ஸ்பூன்
  5. கொத்த மல்லி பவுடர் 1தேக்கரண்டி
  6. காஷ்மீர் சில்லி பவுடர்2தேக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  8. உப்பு தேவையான அளவு
  9. கரம் மசாலா 1/4ஸ்பூன்
  10. எண்ணெய் வறுத்தெடுக்க
  11. மேல் ஊற்றும் மாசாலா தண்ணீர் தேவையானவை
  12. பூண்டு 4
  13. இஞ்சி சிறு துண்டு
  14. வரகொத்தமல்லி 1/2தேக்கரண்டி
  15. சிரகம்1/2தேக்கரண்டி
  16. சோம்பு1/2தேக்கரண்டி
  17. மிளகு1/2தேக்கரண்டி
  18. வெங்காயம் 1
  19. பச்சை மிளகாய்2
  20. கரம் மசாலா தூள்1
  21. உப்பு தேவையான அளவு
  22. கான்பிளவர் மாவு 1தேக்கரண்டி
  23. கொத்தமல்லி தழை சிறிது
  24. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. முதலில் காளானை 5நிமிடம் உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைத்து வடித்துக் கொள்ளவும்
  2. பின்பு மெல்லிய காட்டன் துணியில் துடைத்து வைத்துக் கொள்ளவும்
  3. காளானை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் போட்டு கொள்ள வேண்டும்
  4. அதே பாத்திரத்தில் மைதா அ கோதுமை மாவு,கொத்த மல்லி பவுடர், கான்பிளவர்,இஞ்சி பூண்டு விழுது, காஷ்மீரி சில்லி பவுடர் ,தேவையான அளவு உப்பு அனைத்தையும் சேர்த்து கொள்ளவும்
  5. அவற்றை தண்ணீர் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்த காளானை போட்டு பொன்னிறமாக வரும் வரை வறுத்து எடுக்கவும்
  7. இப்போது பொரித்த காளான் துண்டுகள் ரெடி
  8. பூண்டு இஞ்சி சிறு துண்டு கொத்தமல்லி சீரகம் சோம்பு மிளகு அனைத்தையும் பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்
  9. இவற்றை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்
  10. வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய ஒரு வெங்காயம் 2 பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  11. அரைத்து வைத்தவற்றை சேர்க்கவும்
  12. பின்பு மூடி வைத்து 5 நிமிடம் சமைக்கவும்
  13. மிண்டும் ஒரு ஸ்பூன் கான்பிளவர் மாவு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைத்து ஊற்றவும்
  14. பின்னர் நன்கு கொதித்தவுடன் வறுத்த காளான் துண்டுகளை சேர்த்து கொதிக்க வைத்து வறுத்து கிளறி எடுத்துக் கொள்ளவும்
  15. இப்போது ஒரு தட்டில் அதை பரிமாறிக் கொள்ளவும்
  16. மேலே பொடியாக அரிந்த வெங்காயம், மிளகு தூள்,கார்ன் சேர்த்துக் பரிமாறவும்
  17. இப்போது சுவையான காளான் பிரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்